சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

நாஷா முக்த் பாரத்: சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலை எதிர்க்கும் நாளான இன்று மிகவும் பாதிக்கப்பட்ட 272 மாவட்டங்களில், வருடாந்திர செயல் திட்டத்தை (2020-21) இணையம் வாயிலாக வெளியிட்டது (E –launched)

Posted On: 26 JUN 2020 6:34PM by PIB Chennai

"நாஷா முக்த் பாரத்: போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மிகவும் பாதிக்கப்பட்ட 272 மாவட்டங்களுக்கான வருடாந்திர செயல் திட்டம் (2020-21)" இன்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேசிய போதைப்பொருள் பயன்பாடு குறைப்பு செயல் திட்டத்திற்கான சின்னம்,  முழக்கம், போதைப்பொருள் தடுப்புக்காக தயாரிக்கப்பட்ட 9 வீடியோக்கள் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு. ஆர். சுப்பிரமணியம், துறையின் ஓய்வுபெற்ற இணைச் செயலாளர் திருமதி ராதிகா சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில அரசுகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆன்லைனில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ரத்தன் லால் கட்டாரியா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி “போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை” அனுசரிக்கிறது. பிரச்சினையின் அளவை மதிப்பீடு செய்தல், தடுப்பு நடவடிக்கைகள், அடிமையாக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு, தகவல்களைப் பரப்புதல் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவையை உள்ளடக்கிய அனைத்து போதைப்பொருள் பயன்பாடு தடுப்புக்கான அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பதன் மூலம் போதைப்பொருள் தேவையைக் குறைப்பதற்காக மத்திய அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

2020-21 ஆம் ஆண்டிற்கான நாஷா முக்த் பாரத் வருடாந்திர செயல் திட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 272 மாவட்டங்களை மையமாகக் கொண்டு, போதைப்பொருள் பணியகம், சமூக நீதி மூலம் அவுட்ரீச் / விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத் துறை மூலம் சிகிச்சையின் முயற்சிகளை இணைத்து மும்முனை தாக்குதலைத் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

*******



(Release ID: 1635018) Visitor Counter : 312