அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நவ்ரக்ஷக் என்று பெயரிடப்பட்டுள்ள தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளைத் தயாரிப்பதற்கான NRDC தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் ஆக்ராவை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணி நிறுவனம் ஒன்றுக்குக் கிடைத்துள்ளது.

Posted On: 27 JUN 2020 6:41PM by PIB Chennai

தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம் (NRDC), ஆக்ராவை அடிப்படையாகக் கொண்ட இந்திய துணி நிறுவனம் ஒன்றுடன் வ்ரக்ஷக் என்று பெயரிடப்பட்டுள்ள தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவன சட்டங்களின் படி குறு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஏற்கனவே தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்களைத் தயாரித்து ஆக்ராவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் அதிக அளவில் தேவைப்படுவதால், வ்ரக்ஷக் என்ற தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளைத் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உரிமையைப் பயன்படுத்தி ஆண்டொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளைத் தயாரிக்க, இலக்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

கடற்படையைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர்.அர்னாப் கோஷ் என்பவர் வ்ரக்ஷக் தனிநபர் பாதுகாப்புக் கவச உடையை வடிவமைத்ததில் முதன்மையானவர். தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளைத் தயாரிக்கும் போது, அதைப் பயன்படுத்தும் மருத்துவர்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு தயாரிப்பதற்காக அவர், தனது சொந்த அனுபவங்களைத் தயாரிப்பில் சேர்த்தார். சுவாசத்திற்கு இடையூறு இல்லாத உயர் ரகத் துணி கொண்டு தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளைத் தயாரிப்பது; அதன் வடிவத்தில் புகுத்தப்பட்டுள்ள புதுமைகள் ஆகியவற்றின் காரணமாக அவற்றைக் கையாள்வது எளிமையாகப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கும் தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் அதிக செலவில் டேப் செய்யப்பட்டு, சீல் செய்யப்பட வேண்டிய அவசியம் கொண்டவை. வ்ரக்ஷக் கவச உடையில் இந்தத் தேவை இருக்காது. உடை துணி மற்றும் சீம் (Seam) ஆகியவை ரத்தத்தில் சின்தடிக் நுழைவதைத் தடுப்பதற்கான வசதியைக் கொண்டுள்ளன.

 

மும்பையில் உள்ள கடற்படை கப்பல் தளத்தில் இதற்கான மாதிரி உருவாக்கப்பட்டது. இது பரிசோதிக்கப்பட்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் மற்றும் அலைட் சயின்ஸ், பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம் டிஆர்டிஓ சான்றிதழ் அளிக்கப்பட்டது இந்த ஆய்வுக் கூடம் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம், மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகியவற்றின் விதிமுறைகளின் படியும் தற்போதைய ஐஎஸ்ஓ தரங்களின் படியும், தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளின் மாதிரிகளைப் பரிசோதிக்கும் ஆய்வுக் கூடமாக மத்திய துணை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

 

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0039K8R.jpg

 

 

*****



(Release ID: 1634827) Visitor Counter : 208