பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம்

நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான்

Posted On: 26 JUN 2020 1:34PM by PIB Chennai

மின்கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவையை சண்டிகரில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு வி.பி.சிங் பத்னோர், மத்திய பெட்ரோலியத்துறை, இயற்கை வாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. ருண் கபூர், இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் திரு.ஞ்சீவ் சிங், மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம், சண்டிகர் யூனியன் பிரதேசம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

         மின்கலம் மாற்றும் தொழில்நுட்பம், தாமதமான மின்னேற்ற பிரச்னைக்கு, சிறந்த மாற்றாக உள்ளது மற்றும் வாகன ஓட்டுனர்களின் பணி நேரம் பாதிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. தர்மேந்திர பிரதான், ‘‘நவீன மற்றும் அழகான சண்டிகர் நகரில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சன் மொபிலிட்டி நிறுவனமும் இணைந்து, இந்த வசதியை முன் மாதிரித் திட்டமாக நிறுவியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

 

மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்த அவர், ‘‘இந்தியாவில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்கவும், இது மலிவாக கிடைக்கவும், நாம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்’’ என கூறினார். இந்த நடவடிக்கை, பிரதமரின் தொலை நோக்கு திட்டமான சுயசார்பு இந்தியா திட்டத்தை நோக்கி சரியான திசையில் செல்கிறது என அவர் மேலும் கூறினார்.  

 

சுத்தமான எரிசக்திக்கு, இந்தியாவின் உறுதி குறித்து பேசிய அவர், ‘‘அதிகம் மாசு ஏற்படுத்தாத நாடாக இந்தியா இருந்தாலும், நாட்டில் மாசு அளவை குறைப்பதாகபருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா கருத்தரங்கில் (COP-21) இந்தியா உறுதி அளித்துள்ளது. இந்தத் திசையில், நீடித்து நிலைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாதிரிகளை நாம் மேம்படுத்தி வருகிறோம் மற்றும் பிஎஸ்-6 எரிபொருள், இயற்கை வாயு மற்றும் பெட்ரோலிய வாயு நிலையங்களை அதிகரிப்பது, பெரும்பாலான மக்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு கிடைக்கச்செய்வது, 20% எத்தனால் கலப்பு இலக்கு, பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிப்பது, இயக்கத் தேவைகளுக்கு சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்றார்.         

****(Release ID: 1634501) Visitor Counter : 202