பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் வர்த்தகத்தை மின்னணு மயமாக்க ட்ரைஃபெடின் நடவடிக்கை

Posted On: 25 JUN 2020 6:16PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நல  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ட்ரைஃபெட் நிறுவனம், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 50 லட்சம் வனபொருள் சேகரிப்பாளர்களின்  வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிதி ஆய்வின்படி இந்த வர்த்தகத்தின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியாகும். இந்தப் பணிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், இந்த வர்த்தகத்திற்கான சரியான தளsத்தை ஏற்படுத்துவதற்கும், மின்னணு சந்தை வாயிலாக பழங்குடியின உற்பத்தியாளர்களை, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை சென்றடையச் செய்வதற்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பழங்குடியின கலைஞர்களின் கலைப்பொருட்களை பார்வையிடுவதற்கு இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தின் முகவரி https://trifed.tribal.gov.in/ 

மின்னணு வர்த்தகத்திற்கான போர்ட்டல் ஒன்றையும்,  ட்ரைஃபெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் முகவரி https://www.tribesindia.com/

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1634291

 

*****



(Release ID: 1634420) Visitor Counter : 185