பாதுகாப்பு அமைச்சகம்
“பாதுகாப்பு மாநாடு 2020, குஜராத்” – பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் துவக்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
25 JUN 2020 9:03PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை இணை அமைச்சர், “பாதுகாப்பு மாநாடு 2020, குஜராத்” என்ற பாதுகாப்பு மற்றும் விண்வெளி தளவாடங்கள் உற்பத்திக்கான இரண்டு நாள் டிஜிட்டல் மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பும், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் அமைப்பும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், முக்கிய மனிதநேய மற்றும் புவியியல் பிரச்சினைகளில், நீடித்த தலைமையை அளித்து ஊக்கம் தரும் பொருளாதார சக்தியுடன் இந்தியா உலகளாவிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக நமது நாட்டில் செழித்துள்ள வளமையையும், வர்த்தக பாதைகளையும், பாதுகாப்பதற்கு வலிமையான பாதுகாப்புத்திறன்தான் நமது நாட்டுக்குப் பயன்படும் என்று குறிப்பிட்ட திரு ஸ்ரீபத் நாயக், பாதுகாப்புத்துறையில், வலிமையான உள்நாட்டு செயல் திறனை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். குஜராத் மாநிலம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் பரிணமித்திருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தளவாடங்கள் உற்பத்தித் துறையில், சங்கிலித்தொடர் இணைப்புகளை உருவாக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
----
(रिलीज़ आईडी: 1634418)
आगंतुक पटल : 214