குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி கிராமப்புறத் தொழில் ஆணையம், தனது சொத்துக்களை அதிகரிப்பதற்காக சந்தன மரம் மூங்கில் ஆகியவற்றை நடும் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது

Posted On: 25 JUN 2020 5:29PM by PIB Chennai

சந்தன மரங்களையும் மூங்கில் மரங்களையும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தி, தனது சொத்துக்களை அதிகரிப்பதற்காக 500 சந்தன மரக்கன்றுகளும், 500 மூங்கில் மரக் கன்றுகளும், நாசிக்கில் உள்ள பயிற்சி மையத்தில், 262 ஏக்கர் நிலப்பரப்பில் காதி கிராமப்புறத் தொழில் ஆணையத்தால் (KVIC)   நடப்பட்டுள்ளன.

 

காதி கிராமப்புறத் தொழில் ஆணையத்தின் இந்த முயற்சியை மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழிகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்காரி பாராட்டியுள்ளார்.

 

சந்தன மரக்கன்றுகள், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழிகள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உத்தரப்பிரதேசம் கன்னோஜ்-ல் உள்ள நறுமணம் மற்றும் சுவை மேம்பாட்டு மையம் FFDCயில் (Fragrance and Flavour Development Centre)- இருந்து வாங்கப்பட்டன. மூங்கில் மரக்கன்றுகள் அசாமில் இருந்து வாங்கப்பட்டன. மரக்கன்றுகள் நடும் விழாவை, காணொளி மாநாடு மூலமாக காதி கிராமப்புறத் தொழில் ஆணையத்தின் தலைவர் திரு. வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார். சந்தன மரக் கன்றுகளை நடுவதால், அடுத்த 10 முதல் 15  ஆண்டுகளில் காதி கிராமப்புறத் தொழில் ஆணையத்திற்கு 50 கோடி முதல் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தன மரக்கன்றுகள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்குள் மரங்களாகிவிடும். தற்போதைய நிலவரப்படி ஒரு மரம் 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 

இதேபோல் மூங்கிலில் தனிச்சிறப்பு வாய்ந்த வகையான ம்புசா டுல்டா, அகர்பத்தி குச்சிகளை உருவாக்கப் பயன்படுகிறது. அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் கன்றுகள் மகாராஷ்டிராவில் நடப்பட்டுள்ளன. அங்குள்ள உள்ளூர் அகர்பத்தி தொழில்துறைக்கு உதவும் வகையிலும், அங்குள்ள பயிற்சி மையத்திற்கு தொடர் வருவாய் கிடைப்பதற்காகவும் இந்தக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

-----



(Release ID: 1634412) Visitor Counter : 179