அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மாநில அறிவியல் & தொழில்நுட்ப கவுன்சில்கள், மாநில எல்லைகளைக் கடந்து, மண்டல அளவிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன : பேராசிரியர் அசுடோஷ் சர்மா

Posted On: 24 JUN 2020 12:52PM by PIB Chennai

கர்நாடக மாநில அறிவியல்-தொழில்நட்பக் கவுன்சில் இணையவழியில் ஏற்பாடு செய்திருந்த, மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்களின் 6-வது வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல்தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுடோஷ் சர்மா, அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மாநில அளவிலான அறிவியல்-தொழில்நுட்பக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, மண்டல அளவிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும்மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்களிடையே தலைசிறந்த நடைமுறைகள் மற்றும் அறிவாற்றலைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், 18 ஜுன் 2020 முதல் 1 ஜுலை 2020 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய பேராசிரியர் சர்மா,   “மாநில அளவில் மட்டுமின்றி, மண்டலம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும்  அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்றார்

வைக்கோல்களை (பயிர்க்கழிவு) எரிப்பதால் ஏற்படும் பிரச்சினைக்கு கிராம அளவிலேயே தீர்வுகாணபஞ்சாபின் மோகா மற்றும் பாட்டியாலாவில்வைக்கோல்களைப் பயன்படுத்தக்கூடிய நிலக்கரித் துகள்களால் ஆன பாளங்களைத் தயாரிக்கும்  பிரிவுகளை, அரசு-தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தியதற்காகபஞ்சாப் மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.   கர்நாடகாவைப் பின்பற்றி, அனைத்து மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்களும்மாநிலம் சார்ந்த புள்ளிவிவரக் கட்டமைப்புகளை ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்

 

அறிவியல்-தொழில்நட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக்கான சூழலை உருவாக்கிஅறிவாற்றல் மேலாளர்களாகப் பணியாற்றுவதிலும்,   மாநிலம்சார்ந்த தேவைகளை மதிப்பீடு செய்துவர்த்தக ரீதியில் கட்டுப்படியாகக் கூடிய தீர்வுகளை செயல்படுத்துவதிலும்,   மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்கள் வினையூக்கியாக உருவாக வேண்டும்எனவும் பேராசிரியர் சர்மா குறிப்பிட்டார்.    தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக் கொள்கை-2020 தயாரிப்பதற்கான கலந்தாலோசனை நடவடிக்கைகளில் தீவிரப் பங்காற்றுமாறறு அனைத்து மாநில அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்களுக்கும் அழைப்பு விடுத்த அவர்கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு, பொருளாதாரப் புத்தெழுச்சிக்கான, அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் புதுமை சார்ந்த உத்திகளை வகுக்குமாறும் கேட்டுக்கொண்டார்

29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அறிவியல்-தொழில்நுட்பக் கவுன்சில்களைச் சேர்ந்த அதிகாரிகள், இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.                   

 

*****



(Release ID: 1633902) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Bengali