பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் சிறு வன உற்பத்திப் பொருள்கள் அபரிதமான கொள்முதல்.
Posted On:
21 JUN 2020 7:14PM by PIB Chennai
சிறு வன உற்பத்திப் பொருள்களுக்கு (Minor Forest Produces - MFP) குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) கிடைக்கும் வகையில் அதற்கான கொள்முதல் திட்டத்தின் கீழ் தற்போது மொத்தம் ரூ. 79.42 கோடி அளவுக்கு வன உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து நடப்பு ஆண்டில் மொத்த உற்பத்திப் பொருள் கொள்முதல் ரூ. 2000 கோடியை விஞ்சிவிட்டது. இது தனியார் மற்றும் அரசு சார்ந்த வணிக நிறுவனங்களின் மொத்தக் கொள்முதலாகும்.
வனப் பொருள்கள் கொள்முதல் செய்யப்படுவது, தற்போது கோவிட் 19 (Covid-19) தொற்று பரவியுள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினருக்கு இந்தக் கொள்முதல் மூலம் பெரிதும் கைகொடுக்கும்.
மத்தியப் பழங்குடியினர் நல அமைச்சகம் சிறு வன உற்பத்திப் பொருள்களுக்கு (MFP) குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கிடைக்கச் செய்யும் திட்டத்தின் கீழ் மேலும் 23 வகையான உற்பத்திப் பொருள்களையும் இணைக்க கடந்த மே 26ஆம் தேதி பரிந்துரைத்தது. இதன்படி பழங்குடியினர் திரட்டும் வேளாண் உற்பத்திப் பொருள்கள், காய்கறித் தோட்ட உற்பத்திப் பொருள்கள் ஆகியவையும் கொள்முதல் செய்யப்படும்.
இதன் மூலம் இந்த ஆண்டு கிடைக்கும் ரூ. 2000 கோடி பழங்குடியினர் நலப் பொருளாதாரத்துக்குத் தேவையான வன உற்பத்திப் பொருள்களுக்கு (MFP) குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டம் பழங்குடியினரின் சூழல் அமைப்பையே மாற்றிவிடும். இந்த நடைமுறை நாடு முழுதும் வலுப்படுவதன் மூலம் மேலும் பலன்கள் கிட்டும்.
கடந்த ஏப்ரல் முதல் இரு மாதங்களாக அரசு அளித்துவரும் ஊக்கம், வன தனத் திட்டம் (Van Dhan scheme) ஆகியவை கிரியா ஊக்கியாக அமைந்துள்ளன. அத்துடன், மாநிலங்கள் உத்வேகத்துடன் ஈடுபாடு காட்டுவதும், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் (MSP) மூலம் சிறிய வன உற்பத்திப் பொருள்களை (MFP) சந்தைப்படுத்தும் நடைமுறைக்கான வழிகாட்டுதல்கள், வன உற்பத்திப் பொருள்களின் மதிப்பை மேம்படுத்துவது, வனப்பொருள்களைத் திரட்டிக் கொண்டுவருவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தல், பழங்குடியினர் மூலமே சந்தைப்படுத்துதல் ஆகியவை நாடு முழுவதும் ஆழமாக இடம்பெற்றுவிட்டன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.
(Release ID: 1633298)
Visitor Counter : 228