உள்துறை அமைச்சகம்
கோவிட்-19 பெருந்தொற்றால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஏழைகளுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கவும், மேம்பாட்டுக்காகவும் ரூ.50,000 கோடி மதிப்பிலான “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தை” தொடங்கி வைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா நன்றி
Posted On:
20 JUN 2020 8:44PM by PIB Chennai
ரூ.50,000 கோடி மதிப்பில் “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தை” தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்றால் பிரச்சினைகளை சந்தித்து வரும் ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் நிவாரணம் அளிப்பதுடன் அவர்களை மேம்படுத்தவும் செய்திடும். ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள், இந்த “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்” அங்கமாக இருக்கும் என்று திரு.அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அளிக்கவும், கிராமப்புற மேம்பாட்டுக்காகவும், கிராமப் பகுதிகளில் இந்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் 25 வகையான வேலைகள்/செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள், இந்த பிரச்சாரத்தின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு தேடி நகர்ப்பகுதிகளை நோக்கிச் சென்ற மக்களுக்கு, தற்போது “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்” கீழ், அவர்களது வீடுகளுக்கு அருகிலேயே அவர்களது திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திரு. அமித் ஷா கூறினார். கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதற்காக அவர்களது திறன் பயன்படுத்தப்படும் என்றும், இது கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதுடன், மேலும் வலுப்படுத்தும் என்றும் திரு.அமித் ஷா கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் கூறும்போது, “நமது கிராமங்களை மேம்படுத்தவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும், சுயமரியாதையையும் பாதுகாக்கவும் மோடி அரசு முழுமையான உறுதிபூண்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், “சுயசார்பு பாரதம்” என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த விவகாரத்தில் “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டம்” முக்கியமான பங்கு வகிக்கும்,” என்றார்.
(Release ID: 1633126)
Visitor Counter : 127