சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் – 19 கூடுதல் விவரங்கள்
Posted On:
19 JUN 2020 9:28PM by PIB Chennai
2020, மே 10ஆம் தேதி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வீடுகளில் தனிமைப்படுத்தல் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது:
https://www.mohfw.gov.in/pdf/RevisedguidelinesforHomeIsolationofverymildpresymptomaticCOVID19cases10May2020.pdf
இந்த வழிகாட்டுதல்கள், அதே போலவே தொடர்ந்து செயல்படுகின்றன.
வழிகாட்டுதல்களின்படி, மிகவும் லேசான மற்றும் அறிகுறிக்கு முந்தைய COVID-19 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தலைத் தேர்வு செய்யலாம், இத்தகைய நோயாளிக்கு கழிப்பறை வசதியுடன் ஒரு அறையும், அவருடன் ஒரு உதவியாளர் அனுமதிக்கப்படுவர். மேலும், நோயாளி தனது உடல்நிலையைக் கண்காணிக்க ஒப்புக்கொள்வதோடு, அவர் தனது உடல்நிலை குறித்து கண்காணிப்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிப்பார். அவர் நோயாளியின் சுகாதார நிலையை மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியிடம் தவறாமல் தெரிவிப்பார்.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் ஒரு முக்கிய விதி என்னவென்றால், மருத்துவ மதிப்பீடு மற்றும் அவரது / அவள் குடியிருப்பு விடுதிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளி வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதைப் பற்றி சிகிச்சையளிக்கும் மருத்துவர் முடிவு செய்வார். கூடுதலாக, நோயாளி சுய-தனிமைப்படுத்தல் குறித்த விவரங்களை அறிந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுடன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார். மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ள இதுபோன்ற அனைத்து நோயாளிகளும், தேர்ந்த மருத்துவர்களின் குழுக்களால் வழக்கமான அடிப்படையில் கண்காணிக்கப்படுவதுடன், அவர்கள் எப்போது தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறலாம் என்பதும், அதன் பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் தெரிவிக்கப்படும்.
இது சம்பந்தமாக, சில மாநிலங்களில் வழக்கமான முறையில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவது அனுமதிக்கப்பட்ட சில நிகழ்வுகள் கவனிக்கப்பட்டுள்ளன, மேலும் திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் உட்பிரிவுகள் நடைமுறையில் சரியாகப் பின்பற்றப்படவில்லை. இது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடையே நோய் பரவுவதற்கு வழிவகுக்கும், அதிலும் மக்கள் தொகை அடர்த்தியான நகர்ப்புற அமைப்புகளில் இந்தப் பரவல் மிக வேகமாக நடக்க வழி வகுக்கும்.
இதுதொடர்பாக, கொவிட்-19 தொற்றுநோயைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கள அளவில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களை கோரியுள்ளது.
**********
(Release ID: 1633111)
Visitor Counter : 183