கலாசாரத்துறை அமைச்சகம்

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் பார்வையிட, 31 ஜுலை 2020 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது

Posted On: 19 JUN 2020 6:58PM by PIB Chennai

ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தை, 13.4.2019 முதல் 13.4. 2020 வரை நாடு கடைபிடித்ததுதற்போது, இந்த  நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், அருங்காட்சியகம் / காட்சிக்கூடங்கள் மற்றும் ஒலி-ஒளிக் காட்சி போன்றவையும், இந்த நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த புதுப்பிப்புப் பணிகள் மார்ச், 2020-க்குள் முடிக்கப்பட்டுசம்பவம் நிகழ்ந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்ததுநினைவிட வளாகத்தில் நடைபெறும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த நினைவிடத்தைப் பார்வையிட்டுச் சென்ற நிலையில்புதுப்பிப்புப் பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க ஏதுவாக, 15.2.2020 முதல் 12.4.2020 வரை நினைவிடத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிப்பதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.    ஆனால், கோவிட்-19 பாதிப்பு காரணமாகபுதுப்பிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுஎனவேஇந்த நினைவிடத்தைப் பார்வையிடுவதற்கான தடையை 31.7.2020 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

 

*****



(Release ID: 1632737) Visitor Counter : 148