உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், வேளாண் செயலாக்கக் கூட்டமைப்பின் விளம்பரதாரர்களுடன் இணைய மாநாடுகளை நடத்துகிறார்.

Posted On: 19 JUN 2020 6:02PM by PIB Chennai

மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், வேளாண் பதப்படுத்தும் கூட்டமைப்புகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் (MoFPI) ஆதரவுடன் நடந்து கொண்டிருக்கும் வேளாண் செயலாக்கக் கூட்டமைப்புகளின் (APC கள்) விளம்பரதாரர்களுடன் வீடியோ மாநாடுகளை நடத்தினார். மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை (FPI) அமைச்சர் திரு ராமேஸ்வர் தேலியும் மாநாடுகளில் கலந்து கொண்டார்.

அமைச்சகம் ஒப்புதல் அளித்த 36 திட்டங்கள் அசாம், ஆந்திரா, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. விளம்பரதாரர்கள் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சருடன் உரையாடிய போது திட்டங்களைச் செயல்படுத்துவதில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் / சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தத் திட்டங்களில் தேவையான நேரடிக் களஆய்வின் தேவையை மாற்றுவதற்கு உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (Ministry of Food Processing Industries - MoFPI)  ஒரு புதிய வழிமுறையை வகுத்துள்ளது என்று திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார். தகவல் தொழில்நுட்பக் கருவிகளை மேம்படுத்துவதன் மூலம் மாதாந்திரக் கள ஆய்வுகள் இணையம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணித்து மதிப்பீடு செய்யும் முறை ஒரு குழுவால், கள ஆய்வு மாதிரியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

*******************



(Release ID: 1632685) Visitor Counter : 185