அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 நோயாளிகளுக்கு, மூளையில் உள்ள சுவாச மையம் செயலிழக்கும்போது உடல்நிலை மோசமாகிறது

Posted On: 18 JUN 2020 5:15PM by PIB Chennai

சார்ஸ்–கொவி–2 (SARS-CoV-2) வைரசின் நரம்புகளைப் பாதிக்கும் திறன் குறித்து ஆராய்ந்த, கொல்கத்தாவில் உள்ள சிஎஸ்ஐஆர்-இந்திய ரசாயன உயிரியல் நிறுவனம், இந்த வைரஸ் மூளையில் உள்ள சுவாச மையத்தில் தொற்றுப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும், ஆகையால், கொவிட்-19 நோயாளிகளின் மத்திய நரம்பு மண்டலத்தின் சுவாச மையத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.  விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1632341

----(Release ID: 1632557) Visitor Counter : 85