அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19-க்கு எதிரான உமிஃபெனோவிர் மருந்துக்கு 3-வது கட்ட பரீட்சாத்த சோதனைக்கு ஒப்புதல்
Posted On:
18 JUN 2020 5:12PM by PIB Chennai
கொவிட்-19-க்கு எதிரான, உமிஃபெனோவிர் மருந்தை 3-வது கட்டமாக, பரிசோதனை முயற்சி செய்வதற்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம், லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3-ம் கட்ட பரிசோதனை முயற்சிகள், கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம், எராஸ் லக்னோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1632338
---
(Release ID: 1632544)
Visitor Counter : 158