அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அமீபா அழற்சி நோய்க்கு விரைவில் புதிய மருந்து.

Posted On: 14 JUN 2020 2:34PM by PIB Chennai

ஒட்டுண்ணி நோய் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்; மனிதர்களின் இறப்பு விகிதம் ஆகியவற்றுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது என்டமீபா ஹிஸ்டலிட்டிகா எனப்படும் அமீபா என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அமீபா அழற்சி அல்லது அமீபாவினால் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட இது காரணமாகும் வளரும் நாடுகளில் இது பரவலாகக் காணப்படுகிறது. அமீபா அழற்சியை ஏற்படுத்தும் ஓரணு உயிரிக்கு எதிராகச் செயலாற்றும், புதிய மருந்து மூலக்கூறுகளை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

 

காற்றில்லாத அல்லது நுண் ஏரோஃபிலிக் தன்மை கொண்ட இந்த ஓரணு உயிரியால், அதிக அளவிலான பிராணவாயு உள்ள இடத்தில் இருக்க இயலாது. எனினும் நோய்த்தொற்றின் போது, மனித உடலில் அதிக அளவு பிராணவாயுவை அது எதிர்கொள்கிறது. இந்த பிராணவாயு அழுத்தத்துக்கு எதிராகச் செயல்படுவதற்காக, இந்த உயிரி ஏராளமான சிஸ்டீன்களைத் தொகுக்கிறது.

 

உயர் அளவிலான பிராணவாயுவுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்வதற்காக இந்த நோய்க்கிருமி, அடிப்படை மூலக்கூறுகளுள் ஒன்றா சிஸ்டீன்களை விரிவுபடுத்துகிறது. சிஸ்டீன்களைத் தொகுப்பதற்கென, என்டமீபியா இரண்டு முக்கிய என்சைம்களைப் பயன்படுத்துகிறது. இந்த முக்கிய என்சைம்களின் மூலக்கூறு கட்டமைப்புகளையும், அவற்றின் தன்மைகளையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த இரு என்சைம்களில் ஒரு என்சைம்  ஓ-அசிட்டைல் எல் செரீன் ஸல்ஃப் ஹைட்ரலேஸ் (O-acetyl L-serine sulfhydrylase (OASS)).  ஆகும். இதை எதிர்க்கக்கூடிய தடுப்பான் ஒன்றை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளோம் இந்த உயிரி வளர்வதை சில தடுப்பான்கள் அதிகத் திறனுடன் கட்டுப்படுத்தக்கூடியவை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயிரி அறிவியல் பள்ளியின் தலைமை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சமுத்ரலா கௌரிநாத் India Science Wire இந்தியா சயின்ஸ் வயர் இதழுடன் பேசுகையில் கூறினார்.

 

 “இ ஹிஸ்டோலிடிகா மற்றும் அது மாதிரியான ஓரணு ஒட்டுண்ணிகள் வாழ்வதற்கு சிஸ்டீன் பயோசிந்தசிஸ் மிகவும் முக்கியம். அவை வளரும் பாதையைத் தடுப்பதன் மூலம் அவற்றை இலக்காகக் கொள்ள முடியும். கண்டறியப்பட்ட மூலக்கூறுகள், மருந்து மூலக்கூறுகளைத் தயாரிக்க உதவும் என்று டாக்டர். கௌரிநாத் கூறினார்.

 

இந்த ஆய்வுக்குழுவில் சுதாகர் தராவத், ராமச்சந்திரன் விஜயன், குஷ்பு குமாரி, பிரியா தோமர் ஆகியோர் உள்ளனர். மருத்துவ வேதியல் பற்றிய ஐரோப்பிய ஆய்விதழில் (European Journal of Medicinal Chemistry) இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1631567) Visitor Counter : 305