புவி அறிவியல் அமைச்சகம்
16 முதல் 21 மே 2020 வரையிலான காலத்தில் மேற்கு வங்கத்தில் கரை கடந்த, சூப்பர் சூறாவளிப் புயலான அம்ஃபான் புயல் குறித்து இந்திய வானியல் ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சூப்பர் சூறாவளிப் புயல் அம்ஃபான், சுந்தர்பன்ஸ் பகுதிகளில் மிகத் தீவிரமான சூறாவளிப் புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted On:
14 JUN 2020 2:12PM by PIB Chennai
சுந்தர்பன்ஸ் பகுதிகளில் உயர்ந்தபட்ச, தொடர்ந்த, விரைவான மணிக்கு 155 முதல் 165 கிலோமீட்டர் வரை வீசிய வேகமான காற்றுடன், 185 கிலோமீட்டர் வரை சுழன்றடித்த காற்றுடன் கூடிய மிகத் தீவிரமான சூறாவளிப் புயலாக, 16 முதல் 21 மே 2020 வரையிலான காலத்தில் மேற்குவங்கத்தில் கரைகடந்த, சூப்பர் சூறாவளிப் புயலான அம்ஃபான் புயல் குறித்து இந்திய வானியல் ஆய்வுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சூப்பர் சூறாவளிப் புயலின் உருவாக்கம், செய;ல்பாடு, சிறப்பம்சங்கள், கண்காணிப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை செயல்பாடுகள், அம்ஃபான் புயல் தொடர்பான அறிவுரைகள் பற்றிய விவரங்கள் ஆகியவை குறித்து, இந்த அறிக்கை விவாதிக்கிறது.
விரிவான இந்த அறிக்கையை இங்கே காணலாம்:. https://mausam.imd.gov.in/Forecast/marquee_data/Summary%20Super%20Cyclonic%20Storm%20Amphan%20(13062020).pdf
(Release ID: 1631515)
Visitor Counter : 211