அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான கொள்கை. 2020 -க்கான பொதுமக்கள், நிபுணர்கள் ஆலோசனைக்கான ’நகர அரங்கக் கூட்டம்’ தொடக்கம்.

Posted On: 13 JUN 2020 2:04PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான எஸ்.டி..பி. கொள்கை 2020- உருவாக்குவதற்கான பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் கலந்தாலோசனைக் கூட்டமான நகர அரங்கக் கூட்டத்தை,, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு.கே.விஜயராகவன் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா ஆகியோர், ஜுன் 12, 2020 அன்று தொடங்கி வைத்தனர்.

கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய பேராசிரியர் கே.விஜயராகவன், மாற்றம், நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், உயிரி பன்முகத்தன்மை மற்றும் தகவல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தக்கூடிய அறிவியல் ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது கடினம் என்பதை கோவிட் -19 பாதிப்பு நமக்கு உணர்த்தியிருப்பதாகக் கூறினார். ”பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றுஎனவும் அவர் குறிப்பிட்டார்.

மொழி மற்றும் பிற வகையான அனைத்துத் தடைகளையும் கடந்து, அறிவியலும், அறிவாற்றலும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்ட ஆலோசனை நடவடிக்கையானது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான கொள்கை-2020 பரவலாக்கப்பட்ட, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உள்ளடக்கியதாக உருவாக்குவதற்கு, பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அறிவதற்கான பிரத்யேக அமைப்பான அறிவியல் கொள்கை அமைப்பு வாயிலாக விரிவான கலந்தாலோசனை நடத்துவதாகும்.

  • நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் அசுதோஷ் சர்மா, புதிய கொள்கையானது, சங்கிலித் தொடரில் நலிந்த இணைப்புகளை அடையாளம் காண்பதுடன், தேவைகளை இணைப்பதில் ஏற்படும் குறைபாடுகளையும் கண்டறிந்து அவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் தடையற்ற முறையில் இணைத்து, புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்றார். தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதும், குவிப்பதும் தான் எதிர்காலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறிவியல் கொள்கைக்கான வடிவமைப்பு குறித்து எடுத்துரைத்த அவர், இந்த 2020 கொள்கை எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைத்ததுடன், புள்ளி விவரங்கள், மதிப்பீடு ஞானம், அறிவாற்றல் போன்றவற்றை ஒருங்கிணைத்து, அறிவியலின் பல்வேறு அம்சங்களிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதாகும் என்றும் தெரிவித்தார்.

புதிய தேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான கொள்கை 2020- உருவாக்கும் பணியில் பல்வேறு தரப்பட்டவர்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையும் மேற்கொண்டு வருகின்றன.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான கொள்கை - 2020- உருவாக்கும் பணி, ஒன்றுக்கொன்று தொடர்புடைய 4 உயர் தர வழித்தடத்தில், அதில் தொடர்புடையவர்களை பெருமளவுக்குச் சென்றடையும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*****

 


(Release ID: 1631365) Visitor Counter : 303