புவி அறிவியல் அமைச்சகம்
மும்பைக்கான வெள்ள எச்சரிக்கை முறை “ஐஃப்ளோஸ் மும்பை” ஜூன் 12-ம் தேதி துவக்கம்
Posted On:
11 JUN 2020 6:59PM by PIB Chennai
மும்பை மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, கிரேட்டர் மும்பை மாநகராட்சி, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தை அணுகி, அதன் உதவியுடன் ஐஃப்ளோஸ்-மும்பை என்ற ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை முறையை மும்பை மாநகரத்திற்காக வடிவமைத்துள்ளது. கனமழை பெய்யும் பருவங்களிலும், புயல் ஏற்படும்போதும் வெள்ள அபாயம் குறித்து, இந்த முறையானது முன்னதாகவே எச்சரிக்கை செய்வதற்கு வழிவகுக்கும். ஐஃப்ளோஸ்-மும்பை வெள்ள எச்சரிக்கை முறையை மகாராஷ்டிராவின் முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே மற்றும், மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனும் இணைந்து ஜூன் 12-ம் தேதியன்று மும்பையில் துவக்கி வைக்கின்றனர்.
-----
(Release ID: 1631080)
Visitor Counter : 244