அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பொதுவான கொள்கை மற்றும் சிறந்த செயல்முறைகளை மேம்படுத்த, அறிவியல் தகவல் தொடர்புக்கான கூட்டு அமைப்பை அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைத்துள்ளது

Posted On: 11 JUN 2020 3:56PM by PIB Chennai

பல்வேறு பொதுத்துறை அறிவியல் தகவல் தொடர்பு நிறுவனங்களும், முகமைகளும், தமக்குள் கலந்துரையாடவும், ஒத்துழைக்கவும், ஒருங்கிணைப்பு செய்வதற்கும் வசதியாக, அறிவியல் தகவல் தொடர்புக்கான கூட்டு அமைப்பு ஒன்றை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஏற்படுத்தியுள்ளது.

     பல்வேறு நிறுவனங்களின் அறிவியல் தகவல் தொடர்பு முயற்சிகளை ஓரிடத்தில் இணைக்கவும், பொதுக் கொள்கையை உருவாக்க உதவுவதற்காகவும், சிறந்த செயல்முறைகளை பரவலாக்கவும், தேசிய அளவில் அறிவியல் தகவல் தொடர்பு கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்திற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  இதில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூத்த அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

மேலும் விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630873

-----



(Release ID: 1631069) Visitor Counter : 168