ஜல்சக்தி அமைச்சகம்

மகாராஷ்டிராவில் 2020-2021 கால ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்த இந்திய அரசு 1,829 கோடி ரூபாய் அனுமதித்தது

Posted On: 11 JUN 2020 5:48PM by PIB Chennai

மகாராஷ்டிரா வருடாந்திர செயல் திட்டத்தை குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைக்கு வழங்க பரிசீலித்து ஒப்புதலையும் வழங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் 2023-2024க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் இணைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 1.42 கோடி கிராமப்புற வீடுகளில், 53.11 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே குழாய் இணைப்பு கிடைத்துள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் மேலும் 31.30 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

2020-2021 ஆண்டில் மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு  1,828.92 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. மாநிலத்தின் ரூ.285.35 கோடி  செலவழிக்கப்படாத இருப்பு தொகை மற்றும் இந்த ஆண்டு மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் 2020-2021 கால ஆண்டின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த (JJM) 3,908 கோடி ரூபாயும் இதற்காக செலவிடப்படும். மேலும், (அ) குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி மற்றும் (ஆ) துப்புரவு மற்றும் இலவச கழிப்பறை (ODF) பராமரித்தல் ஆகியவற்றுக்காக 15 வது நிதி ஆணையம் மாநிலத்திற்கு, 5,827 கோடியை மானியமாக ஒதுக்கியுள்ளது.

*******



(Release ID: 1631062) Visitor Counter : 204