ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய உர நிறுவனம் ஐடிஐ-களுடன் கைகோர்ப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUN 2020 11:53AM by PIB Chennai
இந்திய அரசின் “திறன் இந்தியா” முன்முயற்சிக்கு அழுத்தம் தரும் வகையில், தேசிய உர நிறுவனம், தொழில்பயிற்சி மையங்களுடன் (ஐடிஐ) இணைந்து இளைஞர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சி அளிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள ஐடிஐ-களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. கனரக தொழில்கள் உள்ளிட்ட பல தொழில்களில் இளைஞர்கள் வேலைவாய்பைப் பெற இது உதவும்.
இதனையொட்டி தேசிய உர நிறுவனத்தின், பஞ்சாபில் உள்ள நங்கல் தொழிற்சாலை அங்குள்ள ஐடிஐ-யுடன், இளைஞர்களுக்கு 12 தொழில்துறைகளில் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1630640)
வருகையாளர் எண்ணிக்கை : 306