ஜல்சக்தி அமைச்சகம்

நாகாலாந்தில் ஜல்ஜீவன் இயக்கத்தைச் செயல்படுத்த மாநில முதலமைச்சருக்கு ஜல்சக்தி அமைச்சர் கடிதம்.

प्रविष्टि तिथि: 08 JUN 2020 5:43PM by PIB Chennai

நாகாலாந்தில் ஜல்ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் மந்த கதியில் இருப்பதாக கவலை தெரிவித்து, அம்மாநில முதலமைச்சருக்கு , மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம் எழுதியுள்ளார். 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள கிராமப்பகுதி வீடுகள் அனைத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க குழாய் இணைப்புகள் பொருத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த இயக்கம் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் துறையில், பரவலாக்கப்பட்ட, தேவைக்கு ஏற்ப, சமுதாயப் பராமரிப்புக்கு வகைசெய்யும் மாற்றத்தை இந்தத் திட்டம் உருவாக்கும்.

வடகிழக்கு இந்தியாவின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதை திரு. ஷெகாவத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜல்ஜீவன் இயக்கத்துக்கு, வீடுகளுக்கான குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது, நிதி பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், மத்திய அரசு நிதி வழங்குகிறது.

நாகாலாந்தில், 100% வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சருக்கு ஜல்சக்தி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1630284) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Telugu , English , Urdu , हिन्दी , Bengali