சுற்றுலா அமைச்சகம்

நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் நடைபெற்ற 29-வது இணையக் கருத்தரங்கில் மத்தியப் பிரதேசத்தின் வன அதிசயங்களின் மெய்நிகர் பயணத்தை சுற்றுலா அமைச்சகம் வழங்கியது.

Posted On: 08 JUN 2020 5:58PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் மயக்கும் இயற்கை அழகையும், சுற்றுச்சூழல் அமைப்பையும் படம்பிடித்துக் காட்டும் விதமாக, ' மத்தியப் பிரதேசத்தின் வன அதிசயங்கள்' என்னும் தலைப்பில் இணையக் கருத்தரங்கு ஒன்றை நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் சுற்றுலா அமைச்சகம் வழங்கியது. உலகின் மிகச் சிறந்த பல்லுயிர்த்தன்மை மிக்க இடங்களில் ஒன்றான, வியக்கத்தக்க இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநிலத்தை நேரில் காண்பதற்கு இணையான மெய்நிகர் பயண அனுபவத்தை இந்த இணையக் கருத்தரங்கு வழங்கியது.

 

நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் 06 ஜூன், 2020 அன்று நடைபெற்ற இந்த 29-வது இணையக் கருத்தரங்கின் நெறியாளராக சுற்றுலாத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் திருவாளர். ரூபிந்தர் பிரார் இருக்க, மத்தியப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து வன வாழ்க்கைக் குறித்து விரிவாகப் பணியாற்றியிருக்கும் வனவாழ்க்கையைப் படமெடுப்பவரான இளைஞர் திரு. சுயாஷ் கேஷாரி வழங்கினார். ஒரே பாரதம், சிறப்பான பாரதம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமானப் பன்முகத்தன்மையை படம் பிடித்துக் காட்டும் முயற்சியாக நமது நாட்டைப் பாருங்கள் இணையக் கருத்தரங்கு இருக்கிறது.

 

இயற்கை வனவாழ்வு, வரலாறு மற்றும் இதிகாசங்களின் கலவையாக மத்தியப் பிரதேசம் திகழ்கிறது. புலிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் பந்தவ்கர் தேசியப் பூங்காவில் இருந்து அழகானப் பயணத்தை சுயாஷ் தொடங்கினார். 32 மலைகளின் பேரழகை இந்த தேசியப் பூங்கா வழங்குகிறது.

 

சத்திஸ்கரில் மறைந்துள்ளப் பொக்கிஷங்களை 9 ஜூன் அன்று அடுத்த  நமது நாட்டைப் பாருங்கள் இணையக் கருத்தரங்கு படம் பிடித்துக் காட்டவிருக்கிறது. பங்கு பெறுவோர் https://bit.ly/ChhattisgarhDAD என்னும் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

***
 (Release ID: 1630278) Visitor Counter : 17