எரிசக்தி அமைச்சகம்
5000 தொழிலாளர்களுக்கும், தேவைப்படுவோருக்கும் அத்தியாவசியப் பொருட்களை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் விநியோகிக்க உள்ளது
Posted On:
08 JUN 2020 3:53PM by PIB Chennai
மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் (REC), சமூக கடமைப் பிரிவான ஆர்இசி அறக்கட்டளை, கொவிட்-19 முடக்கநிலைக் காலத்தில் 5000 தொழிலாளர்களுக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை விநியோகிக்க உள்ளது.
இந்த நிறுவனம், இம்மாதம் 4-ம் தேதி அன்று தில்லியில் உள்ள 500 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை விநியோகித்தது. இதே போல் 7-ம் தேதியன்று குர்கான், நொய்டா பகுதிகளில் 1000 பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
-----
(Release ID: 1630224)
Visitor Counter : 210