அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வாய்வழி புற்றுநோய்களை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணினி நோயறிதல் கட்டமைப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் (IASST) உருவாக்குகிறது

प्रविष्टि तिथि: 07 JUN 2020 2:53PM by PIB Chennai

இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான குவஹாத்தியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் (IASST) விஞ்ஞானிகள், வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோயை விரைவாகவும் துல்லியமாக, முன்கூட்டியே கணிப்பதற்கு உதவியாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.

டாக்டர் லிப்பி பி மகாந்தா தலைமையிலான IASST, மத்தியக் கணக்கீட்டு மற்றும் எண் அறிவியல் பிரிவில் உள்ள ஆராய்ச்சிக் குழு உருவாக்கிய கட்டமைப்பும் வாய்வழிச் செதிள் உயிரணு புற்றுநோயைத் தரப்படுத்த உதவும்.

*******************


(रिलीज़ आईडी: 1630060) आगंतुक पटल : 318
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali