ஜல்சக்தி அமைச்சகம்
அசாமில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஜல்சக்தித்துறை மத்திய அமைச்சர் கவலை
प्रविष्टि तिथि:
05 JUN 2020 4:25PM by PIB Chennai
அசாம் மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மிகவும் மெதுவாக செயல்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்து ஜல்சக்தித்துறை மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், அசாம் மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி முதன்மையாக தீட்டியுள்ள திட்டங்களில் ஒன்றாகும் ஜல் ஜீவன் மிஷன். வாழ்க்கையை மாற்றக்கூடிய இத்திட்டம், கட்டமைப்பை உருவாக்குவது என்பதைக் காட்டிலும் சேவையை அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஜல் ஜீவன் மிஷனில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது போல பரவலாக்கப்பட்ட, தேவைக்கேற்ப, சமூக மேலாண்மைக்குட்பட்ட கிராம/ இருப்பிட வாழிட அளவிலான குடிநீர் வழங்கு அணுகு முறையுடன் கூடிய இத்திட்டம், இந்தியாவில் குடிநீர் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும்.
(रिलीज़ आईडी: 1629731)
आगंतुक पटल : 232