குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு,குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவியை வழங்குவதற்கு உகந்த வகையில் வங்கியல்லாத நிதிநிறுவனங்களை வலுப்படுத்த நேரடி அந்நிய முதலீட்டைக் கவர்ந்திழுப்பது குறித்தும் சிந்திக்கலாம் – திரு. நிதின் கட்காரி
Posted On:
04 JUN 2020 7:03PM by PIB Chennai
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீது கொரொனோ பெருந்தொற்றுத் தாக்கம் குறித்து விவாதிப்பதற்கென தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில், இந்தியத் தொழில் வணிகக் கூடமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry - FICCI) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company - NBFC) வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான ஐஎம்சி கழகம் (IMC Chamber of Commerce and Industry) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று காணொளிக் காட்சியின் மூலம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
தற்போது நிலவி வரும் பொருளாதார உறுதியற்ற தன்மையை சமாளிக்க நிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு மிகவும் தேவையான உத்வேகத்தை வழங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் சிறப்புப் பொருளாதார உதவிகளுக்கான தொகுப்பு: சுயசார்பு மிக்க இந்தியா திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இத்துறைக்காக அறிவிக்கப்பட்ட பல்வேறு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் விளக்கினார். இந்தத் துறைக்கு தேவையான ஆதரவை வழங்க சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்த வரையறையில் மாற்றங்கள் உள்ளிட்டு, தொடர்புடைய பங்குதாரர்களிடமிருந்து முதலீடு மற்றும் வருவாய் வரம்பு அடிப்படையிலான உள்ளீடுகளை அதிகரிப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் வரையறை மேலும் திருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
தோல் ஏற்றுமதிக்கான கவுன்சிலின் பிரதிநிதிகளிடையே அமைச்சர் உரையாற்றுகையில், ஆக்ரா சுற்றுவழிச் சாலைக்கு அருகில் தோல் தொழில் நிறுவனங்களுக்கான வளாகம் ஒன்றை உருவாக்குவதற்கான முன்வரைவை சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார். இந்தத் தொழில் மையங்கள் அறிவார்ந்த நகரங்களாக, அறிவார்ந்த கிராமங்களாக, இதர கட்டுமான வசதிகளைக் கொண்டவையாக உருவாகும் என்பதோடு ஆக்ராவில் உள்ள தோல் தொழிலில் பணியாற்றுவோருக்கும் உதவி செய்வதாக அமையும். தோல் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய தனியார் விமான நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து ஒப்புதலைப் பெறவும் முயற்சிக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் அதே நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமே இன்றைய தேவையாக உள்ளது என்றும் திரு. கட்காரி குறிப்பிட்டார். இந்தப் பெருந்தொற்று ஒருவகையில் நமக்கு நன்மை தருவதாகவும் கூட இருக்கலாம்; எனவே இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் முழுக் கவசங்களை பயன்படுத்துவது, முகக்கவசங்கள், கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் சமூக ரீதியான விலகல் குறித்த விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
(Release ID: 1629580)
Visitor Counter : 172