இந்திய போட்டிகள் ஆணையம்

இந்திய காம்பெடிஷன் ஆணையம் (CCI), ப்யூஜோ எஸ் ஏ (Peugeot S.A), ஃபியட் கிரிஸ்லேர் ஆட்டோமொபைல் என்வி (Fiat Chrysler Automobiles N.V) நிறுவன இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 04 JUN 2020 7:54PM by PIB Chennai

இந்திய வியாபரப் போட்டி ஆணையம் (CCI),  ப்யூஜோ எஸ் ஏ (Peugeot S.A), ஃபியட் கிரிஸ்லேர் ஆட்டோமொபைல் என்வி (Fiat Chrysler Automobiles N.V) நிறுவனங்களின் உத்தேச இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது..  

 

இந்த உத்தேச இணைப்பு ப்யூஜோ எஸ் ஏ (Peugeot S.A), (“PSA”)  மற்றும் ஃபியட் கிரிஸ்லேர் ஆட்டோமொபைல் என்.வி (Fiat Chrysler Automobiles N.V) (“FCA”) இரண்டு நிறுவனங்கள் இணைவது தொடர்பானது.

 

பிஎஸ்ஏ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, லிமிடெட் யபிலிடி (Limited Liability) நிறுவனமாகும் இது பிரான்சில் தொடங்கப்பட்டது. இதனுடைய ஹோல்டிங் நிறுவனம் பிரெஞ்ச் அடிப்படையிலான குழுமம். இது முக்கியமாக மோட்டார் வாகனக்கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம். மோட்டார் வாகனங்களின் - குறிப்பாக பயணிகள் கார் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்கள் ப்யூஜோசிட்ரான், ஓபல், வாக்ஸால் டி எஸ் (Peugeot Citroën, Opel, Vauxhall and DS) ரக வாகனங்களின் விற்பனையாளருமாகும்.  இந்நிறுவனம் வாகனங்களை வாங்குவதற்கான நிதிச் சேவைகள், போக்குவரத்து சேவைகள், தீர்வுகள் போன்ற இதர தொடர்புடைய சேவைகளையும் வழங்குகிறது.

 

 

FCA நிறுவனம் லிமிடெட் லயபிலிடி கொண்ட பொது நிறுவனம். இது, நெதர்லாந்தின் சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு நிறுவப்பட்ட, லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமாகும். மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி அமைப்புகள் ஆகியவற்றை உலகம் முழுவதும் வடிவமைத்தல், பொறியியல், உற்பத்தி, விநியோகம், விற்பனை செய்வதில் உலக அளவிலான மோட்டார் வாகன ஆட்டோமேட்டிவ் குழுமமாகும்.

 

(CCI), யின் விரிவான ஆணை தொடரும்.



(Release ID: 1629575) Visitor Counter : 138