பாதுகாப்பு அமைச்சகம்

உலகச் சுற்றுச்சூழல் தினம் 2020

Posted On: 04 JUN 2020 5:51PM by PIB Chennai

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை முன்முயற்சிகளில் எப்போதும் இந்தியக் கடற்படை முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. ஒரு பொறுப்புள்ள பல பரிமாணப் படை என்ற முறையில், இந்தியக் கடற்படை எரிசக்தி சேமிப்பு, கடல் மாசுக் குறைப்பு ஆகியவற்றின் மூலம், சுற்றுச்சூழல் கால்தடத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாற்று எரிபொருள் ஆதாரத்தையும் அது பயன்படுத்தி வருகிறது.  நீல நீர் நடவடிக்கைகளில் , பசுமை கால்தடத்தைப் பதிக்கும் இந்தியக் கடற்படையின் நோக்கத்தை முன்னேற்றத்துடன் எட்டுவதற்கு ,‘இந்தியக் கடற்படைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறை’ (ஐஎன்இசிஆர்) ஒரு வழிகாட்டு ஆவணமாகவும், முக்கிய ஊக்குவிப்பாகவும் இருந்து வருகிறது.

 

கடல் மாசு, பூமி வெப்பமயமாதல், நீடித்த நுகர்வு போன்ற சுற்றுச்சூழல் விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் உலகத்தளமாக உலகச் சுற்றுச்சூழல் தினம் வளர்ந்து வருகிறது. இந்தியக் கடற்படை இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முடக்க நடவடிக்கைகளை அமல்படுத்தி கடைப்பிடித்தது. எப்போதும் நடைபெறும் திறந்த வெளி நடவடிக்கைகளுக்குப் பதிலாக, கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உரைகள், இணையவழி பயிலரங்குகள் ஆகியவை மின்னணு ஊடகங்கள் மூலம் நடத்தப்பட்டன.

 

எஞ்சின் வெளியிடும் புகை மாசைக் குறைக்கும் நோக்கத்துடன், இந்தியக் கடற்படை, இந்திய எண்ணெய்க் கழகத்தின் ஒத்துழைப்புடன் எரிபொருள் விதிமுறைகளை மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. சர்வதேச விதிமுறைகளை, கந்தக உள்ளீட்டை குறைப்பது உள்ளிட்ட இந்தப் புதிய விதிமுறை கடந்துள்ளது. இதன் மூலம் காலப்போக்கில் உமிழ்வு அளவுகள் குறைந்து, கப்பல் பராமரிப்பு தேவைகளும் குறையும். உயிரி பல்நோக்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே நேரம், தற்செயலாக 2020-ஆம் ஆண்டின் உலகச் சுற்றுச்சூழல் தின கருப்பொருளாகவும் அது அமைந்துள்ளது, கடற்படையில் பெருங்கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கப்பல்களிலிருந்து வெளியாகும் புகை மாசைத் தடுப்பதற்கான சர்வதேச மாநாட்டின் ஆறு விதிமுறைகளையும் (மார்போல்) இந்தியக் கடற்படை தானாக முன் வந்து செயல்படுத்தி வருகிறது. கடல் நீரிலிருந்து எண்ணெய்ப் பலத்தைப் பிரித்தெடுக்கும் கட்டுப்பாட்டுக் கருவி, கப்பலில் சேரும் கழிவுகளை சுத்திகரிக்கும் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் மார்போல் உபகரணம் அனைத்து கடற்படைக் கப்பல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், துறைமுகங்களில் கடல் நீரின் தூய்மையை உறுதி செய்ய, துரித உயிரிகவியல் தொழில்நுட்பம், மும்பை கடற்படைப் பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 


(Release ID: 1629441) Visitor Counter : 364