சுற்றுலா அமைச்சகம்

உங்களது நாட்டைப் பாருங்கள் என்ற கருத்துரு அடிப்படையில் சுற்றுலா அமைச்சகம் சார்பில் நடைபெற்ற 27-வது காணொளி ஆலோசனை மூலம் “ஹரியானா: கலாச்சாரம், உணவு, சுற்றுலா” குறித்து விளக்கம்.

Posted On: 03 JUN 2020 8:07PM by PIB Chennai

ஹரியானா மாநிலத்தின் வளமான மற்றும் பல்வேறுபட்ட பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், “ஹரியானா: கலாச்சாரம், உணவு மற்றும் சுற்றுலாஎன்ற இணையதளக் கருத்தரங்கை மத்திய சுற்றுலாத்துறை ஜூன் 2, 2020-இல் நடத்தியது. “உங்களது நாட்டைப் பாருங்கள்என்ற கருத்துரு அடிப்படையில் 27-வது அமர்வை சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ரூபிந்தர் பிரார் ஏற்பாடு செய்தார். ஒரே பாரதம் வளமான பாரதம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் வளமான வேற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாக “உங்களது நாட்டைப் பாருங்கள்” என்ற கருத்துரு அடிப்படையில் இணையதளம் மூலமான தொடர் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதன் மூலம், ஒரே பாரதம் வளமான பாரதம் குறித்து மெய்நிகர் தளம் மூலம் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள், ஹரியானாவின் வரலாறு மற்றும் புராணம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், சர் சோட்டு ராம், ராவ் துலா ராம், பிடி. நேகி ராம், தவ் தேவி லால் போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் நினைவுகூர்ந்தனர். ஹரியானா குறித்த தகவல்கள் தேஸ்வாலி பகுதி மற்றும் பகரி பகுதி என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பாக விளக்கப்பட்டது. இதுவரை மக்களுக்கு அதிக அளவில் அறியப்படாத மண் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலத்தின் பிராந்தியங்கள் (உதாரணமாக, காதர், நார்தக், பகத், பங்கர்), மக்கள் பகிர்வு அடிப்படையிலான பிரிவு (உதாரணமாக, அகிர்வால், மேவத், பிராஜ்), சுற்றுச்சூழல் கலாச்சார அடிப்படையிலான மண்டலங்கள் (உதாரணமாக, அகிர்வால், மேவத், பகர், நார்தக், காதர்) ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பல்வேறு பிரபலமான விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்களையும் ஹரியானா கொண்டுள்ளது. அதாவது, கபில்தேவ், சுஷில்குமார், மல்லிகா ஷெராவத், மேகனா மாலிக், ரந்தீப் ஹுட்டா உள்ளிட்டோர் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள்.

அடுத்தகட்ட இணையதள ஆலோசனையை ஜூன் 4, 2020, காலை 11 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா - கோஃல்ப் வீரர்களின் சொர்க்கம் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பதிவுசெய்து கொள்ள வேண்டிய இணையதளம்: https://bit.ly/GolfDAD

*******



(Release ID: 1629417) Visitor Counter : 156