ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

தேசிய உரங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக வி. என். தத் பொறுப்பேற்கிறார்.

प्रविष्टि तिथि: 03 JUN 2020 2:05PM by PIB Chennai

தேசிய உரங்கள் நிறுவனத்தின் - NFL இயக்குநர் (சந்தைப்படுத்தல்) திரு. வீரேந்திர நாத் தத் இன்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.

உரத் தொழிலைத் தவிர, முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனங்களான கெயில் (GAIL) மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) போன்ற அமைப்புகளுடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரு. தத் தொழில்முறை அனுபவம் பெற்றவர். 

 
NFL நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, அவர் கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார், அங்கு கார்ப்பரேட் வியூகம், திட்டமிடல் மற்றும் அந்நிறுவனத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பணி புரிந்ததுடன் கூடுதலாக நிறுவனத்தின் அகில இந்திய சந்தைப்படுத்தல் (Marketing) நடவடிக்கைகளையும் கையாண்டார். மேலும், அவர் மும்பை மகாநகர் கேஸ் லிமிடெட் வாரியத்தில் இயக்குநராகவும் இருந்தார்.

 
*********** 

(रिलीज़ आईडी: 1629029) आगंतुक पटल : 328
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu