அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிய அறிவியல் தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த கொள்கைக்கான (STIP) கலந்தாலோசனை துவக்கம்.

Posted On: 02 JUN 2020 3:39PM by PIB Chennai

புதிய அறிவியல் தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த (STIP 2020) கொள்கையை வகுப்பதற்காக பரவலாக்கப்பட்ட, கீழிலிருந்து மேல் வரையிலான அனைவரையும் உள்ளடக்கிய வழிமுறை ஒன்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து தொடங்கியுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்றைச் சமாளிக்க இந்தியாவும் உலகமும் போராடிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் இந்த ஐந்தாவது அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை வகுக்கப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், அறிவியல் தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான புதிய அணுகுமுறையையும், உத்திகளையும் உருவாக்குவதற்கான தேவைகளைக் கொண்டு வந்த, மிக முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்

 

இந்த நெருக்கடியான நிலைமை உலகையே மாற்றி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பரவலாக்கப்பட்ட முறையில் வகுக்கப்படவுள்ள இந்தப் புதிய கொள்கை அறிவியல் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னுரிமைகள் பல்வேறு துறைகளுக்கான கவனம்; மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் வழிமுறைகள்; தொழில்நுட்ப மேம்பாடுகள்; பரந்த அளவிலான சமூகப் பொருளாதார நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் புதுமையாக மாற்றியமைக்க வழிவகுக்கும்.



(Release ID: 1628747) Visitor Counter : 279