அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுய-சார்பு இந்தியாவுக்கு அறிவியல், தொழில்நுட்பம் எவ்வாறு வழி வகுக்கும் என்பதைக் கண்டறிய அறிவாற்றல் தொடர்பை நாம் சோதிக்க வேண்டும்: ராஜஸ்தான் ஸ்ட்ரைட் (STRIDE) மெய்நிகர் மாநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர்.
Posted On:
02 JUN 2020 3:38PM by PIB Chennai
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முயற்சியான ராஜஸ்தான் ஸ்ட்ரைட் (STRIDE) மெய்நிகர் மாநாட்டில் மே 30, 2020 அன்று பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா, சுய-சார்பு இந்தியாவுக்கு அறிவியல், தொழில்நுட்பம் எவ்வாறு வழி வகுக்கும் என்பதைக் கண்டறிய அறிவாற்றல் தொடர்பை சோதித்து அதனை முழுவதுமாக வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"சுய-சார்பு இந்தியா அல்லது ஆத்ம நிர்பார் பாரத்துக்கான அழைப்பு இருப்பதால், உலகத் தரத்தில் அதற்கான பதில் இருக்க வேண்டும். சுய-சார்புடன் நாம் விளங்குவதற்கு, இந்தியாவின் பலங்களான ஆராய்ச்சி, மேம்பாடு, வடிவமைப்பு, பணியாளர்கள், பெரிய சந்தைகள், மக்கள் தொகையின் பலம், பன்முகத்தன்மை மற்றும் தகவல்களை நாம் வலுப்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
அறிவியல், சமுகம் மற்றும் சுய-சார்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்திய பேராசிரியர் ஷர்மா, கொவிட்-19 நெருக்கடியில் இருந்து கற்றுக் கொண்டதைப் பற்றி பேசினார்.
"உலகத் தரத்திலான சுவாசக் கருவிகளாக இருக்கட்டும் அல்லது புதிய பரிசோதனை முறைகள் ஆகட்டும், கொவிட்-19-க்கான தீர்வுகளைக் கண்டறிவதில் பெரிய விஷயங்கள் கடந்த இரண்டு மாதங்களில் நடந்துள்ளன. நமது தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்தான தெளிவான மற்றும் சரியான புரிதல், மற்றும் கல்வித் துறையினர், தொழில் துறையினரைப் பங்குதாரர்களாகக் கொண்ட, சிக்கலை நோக்கிய அணுகுமுறை தான் இவற்றுக்கெல்லாம் காரணம். அறிவு உற்பத்தி அமைப்புகளோடு அறிவு நுகர்தலை இணைப்பதன் மூலமாக இவை இரண்டுக்கும் நன்மை செய்வதோடு, நமது பலங்களையும், கொவிட்-19 மூலம் கற்றுக் கொண்ட பாடங்களையும் விரைவாகவும், பெரிய அளவிலும் நாம் கட்டமைக்கலாம்," என்று அவர் கூறினார்.
***
(Release ID: 1628723)