புவி அறிவியல் அமைச்சகம்

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளது, இயல்பான தேதியான ஜூன் 1ஆம்தேதியுடன் ஒத்துப்போகிறது.

Posted On: 01 JUN 2020 2:21PM by PIB Chennai

பருவமழையின் வடஎல்லை (NLM) அட்சரேகை 120என் / தீர்க்கரேகை வழியாகச் செல்கிறது. 

வானிலை நிலவரம், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை நோக்கியுள்ளது.  

  1. கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் பரவலாக  மழைப் பொழிவு இருந்தது. கேரளாவில் உள்ள 14 மழைப்பொழிவு மையங்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை கடந்த 48 மணி நேரத்தில் மழைப்பொழிவை அறிவித்தன.
  2. மேற்கத்திய காற்றுகள் கீழ்மட்ட அளவில் வலுவடைந்து, (காற்றின் வேகம் 20 நாட் அளவில் இருந்தன) தென் அரபிக்கடலுக்கு மேலே 4.5 கிலோ மீட்டர் வரை வலுவடைந்தது.
  3. மே 24-ஆம் தேதி முதலான, கடலோர டாப்ளர் வானிலை ரேடார் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் படி, உறுதியான வெப்பச்சலனம் (வெளியேறும் நீண்டஅலை கதிரியக்க அளவுகள் <200 Wm-2) நிலவுகிறது. .
  4. மேலும், தென்கிழக்கு  மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் மே 31, 2020 குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில், இன்று (01.06.2020) காலை தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.


(Release ID: 1628314) Visitor Counter : 212