பாதுகாப்பு அமைச்சகம்
அந்தமான் நிக்கோபார் கமாண்டின் தலைமைக் கமாண்டராக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நாளை பொறுப்பேற்கிறார்
प्रविष्टि तिथि:
31 MAY 2020 6:22PM by PIB Chennai
அந்தமான் நிக்கோபார் கமாண்டின் 15-வது தலைமை கமாண்டராக ஜூன் 1, 2020 அன்று லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, ஏவிஎஸ்எம், விஎஸ்எம் பொறுப்பு ஏற்கிறார். தேசியப் பாதுகாப்பு அகாடமியின் பழைய மாணவரான ஜெனரல் அதிகாரி, 1982-ஆம் ஆண்டு டிசம்பரில் சைனியப் பொறியாளர்கள் (பம்பாய் சப்பர்ஸ்) பிரிவில் பணியமர்த்தப்பட்டார். அவர், கம்பர்லி ஸ்டாப் கல்லூரியில் (இங்கிலாந்து) பட்டம் பெற்றார். மோவ்-ல் உள்ள ராணுவ போர்க் கல்லூரியில் உயர் கமாண்ட் படிப்பில் சேர்ந்தார். தில்லி தேசியப் பாதுகாப்புக் கல்லூரியிலும் அவர் பயின்றார்.
37 ஆண்டு மகத்தான சேவையின் போது, ஆபரேசன் விஜய் , பராக்ராம் ஆகியவற்றில் ஜெனரல் அதிகாரி தீவிரப் பங்கேற்றார். ஜம்முகாஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோடுப் பகுதியில் பொறியாளர் பிரிவுக்குத் தலைமை விகித்தார். ஸ்ட்ரைக் கார்ப்சின் பகுதியாக பொறியாளர் படைப்பிரிவு, கட்டுப்பாட்டுக் கோடுப் பகுதியில் காலாட்படை பிரிவு, மேற்கு லடாக் உயர் மலைப்பகுதி, லைன் ஆப் ஆக்சுவல் கண்டரோல் பணி, வடகிழக்குப் பிராந்தியத்தில் கலவரத்தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார். பல முக்கிய பணிகளில் பங்காற்றிய அவர், எத்தியோப்பியா, எரித்ரியாவில் ஐ.நா இயக்கத் தலைமைப் பொறியாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் பொறுப்புக்கு முன்பாக, ராணுவத் தலைமையகத்தில் ஒழுங்கு, நிகழ்ச்சிகள் மற்றும் நலன் ஆகியவற்றைக் கவனிக்கும் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
------
(रिलीज़ आईडी: 1628253)
आगंतुक पटल : 343