பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இரண்டாவது முறையாக மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, மே 30, 2019 முதல் மே 30, 2020 வரையிலான காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் சாதனைகள் அடங்கிய மின்னணுத் தொகுப்பை வெளியிட்டார் டாக்டர் ஜிதேந்திர சிங்.

Posted On: 30 MAY 2020 7:27PM by PIB Chennai

இரண்டாவது முறையாக மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, மே 30, 2019 முதல் மே 30, 2020 வரையான காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை மேற்கொண்ட சாதனைகள் குறித்த மின்னணுத் தொகுப்பை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். சாதனைகளை மக்களுக்கு வெளியிட்ட முதல் துறையாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்த டாக்டர் சிங், காணொளிக் காட்சி மூலம் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சிறந்த ஆளுகை என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற உறுதியை முழு மனதுடன் ஏற்று செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் மின்னணு ஆளுகைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயல்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக,

அ. மத்திய தலைமைச் செயலகமும், மாநிலங்களும் மின்னணு அலுவலகங்களை அமல்படுத்துவதை தீவிரமாகப் பின்பற்றியுள்ளன.

ஆ. 22-வது தேசிய மின்னணு ஆளுகைக் கருத்தரங்கை ஷில்லாங்-கில் 2019-லும், 23-வது தேசிய மின்னணு ஆளுகைக் கருத்தரங்கை மும்பையில் 2020-லும் நடத்தியுள்ளது



(Release ID: 1628153) Visitor Counter : 171