ஜல்சக்தி அமைச்சகம்

பீகார் மாநிலத்தின் ஜல் ஜீவன் மிஷன் (ஹர் கர் ஜல்) ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் என்ற திட்டத்திற்கான ஆண்டு செயல் திட்டத்திற்கு ஒப்புதல்.

Posted On: 30 MAY 2020 4:45PM by PIB Chennai

ஜல்சக்தி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக பீகார் மாநிலம், தனது ஜல் ஜீவன் மிஷன் ஆண்டு செயல்திட்டத்தை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. 2020 -21ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் தொடர்பு வசதியை 100 சதவிகிதம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திட்டத்தை சமர்ப்பித்தது. குடிநீர்க் குழாய் வசதி செய்யப்படாமல் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க்குழாய் வசதி செய்து கொடுப்பதை பீகார் மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது. இது மிகப்பெரிய இலக்காகும். ஆனால் பீகார் மாநில அரசு, இந்த இலக்கை அடைவதற்கான பாதையை ஏற்கனவே வகுத்துள்ளது. 2020- 21ஆம் ஆண்டுக்குள் 38 மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் நூறு சதவிகிதம் குடிநீர்க் குழாய் வசதிசெய்து கொடுப்பதற்கான முறையான திட்டம் ஒன்று தயாராக உள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், ஷெட்யூல்டு பிரிவினர்/ செட்யூல்டு பழங்குடியின கிராமங்களுக்கும் எனப்படும் இல்லங்களில் செயல்படும் குடிநீர் குழாய் தொடர்பு (Functional Household Connection) ஏற்படுத்திக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பீகாரில் நிலத்தடியிலும், நீர்நிலைகளிலும் தண்ணீர் அபரிமிதமாக உள்ளதால், பீகார் மாநிலம் இத்திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் எடுத்துவருகிறது.

 

2020- 2021 ஆம் ஆண்டுக்குள் 1.50 கோடி வீடுகளுக்கு குடிநீர்க் குழாய்த் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க இம்மாநிலம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்காக 2020 -2021 ஆம் ஆண்டுக்கு 1832.66 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

 



(Release ID: 1627930) Visitor Counter : 244