நிதி அமைச்சகம்

பிரிக்ஸ் நாடுகளின் வரித்துறைth தலைவர்களின் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் மே 20, 2020ஆம் தேதி நடந்தது.

Posted On: 29 MAY 2020 8:46PM by PIB Chennai

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் வரித்துறைத் தலைவர்களின் கூட்டம் மே 20, 2020 அன்று நடந்தது. இந்தக் கூட்டம் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 தொற்றை முன்னிட்டு, இது காணொளிக்காட்சி மூலம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில், மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் டாக்டர்.அஜய்பூஷன்பாண்டே கலந்துகொண்டார். கோவிட்-19 பிரச்சினை காரணமாக, வரிசெலுத்துவோருக்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க, கடன் தவணை செலுத்துதல் ஒத்திவைப்பு, தாமதக் கட்டணத்துக்கான வட்டிவீதம் குறைப்பு, வட்டிக்குறைப்பு போன்ற இந்தியா எடுத்த பல நடவடிக்கைகளை அவர் பிரிக்ஸ் நாடுகளுடன் பகிர்ந்து கொண்டார். பிரிக்ஸ் நாடுகளின் வரி நிர்வாகங்கள் அவ்வப்போது எடுக்கப்படும் கோவிட்-19 தொடர்பான வரி நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தொற்று சமயத்தில் நிதி மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு பற்றிய புரிதலை அதிகரிக்க உதவும் என்றார். மேலும் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் தொற்றுபாதிப்பிலிருந்து மீள்வதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதில் பல்வேறு சாத்தியங்களை மதிப்பீடு செய்ய இந்தத் தகவல்பகிர்வு ஊக்குவிக்கும் என்றார்.

எல்லை தாண்டிய நிதிமோசடிக் குற்றங்கள், வரிவிதிப்பு மட்டும் அல்லாமல் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இப்பிரச்சினையைக் கையாள்வதில் அரசின் முழு அணுகுமுறையைப் பின்பற்றும் அவசியத்தை டாக்டர்.பாண்டே சுட்டிக் காட்டினார். ஊழல், நிதிமோசடி மற்றும் தீவிரவாத்துக்கு நிதியளிப்பது போன்றவற்றை எதிர்கொள்வதில், வரி ஒப்பந்த்த்தின் கீழ் அதிக அளவிலான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள பிரிக்ஸ் நாடுகள் சம்மதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



(Release ID: 1627885) Visitor Counter : 295