பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
प्रविष्टि तिथि:
29 MAY 2020 6:48PM by PIB Chennai
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் மார்க் டி எஸ்பெரின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவருடன் தொலைபேசி மூலம் உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்க்கும் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை இரு அமைச்சர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்தவிஷயத்தில் சிறப்பான இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர இருவரும் உறுதி மேற்கொண்டனர். பல்வேறு இருதரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தங்களின் அர்ப்பணிப்பு உணர்வைத் தெரிவித்தனர். உரையாடலின் முடிவில், இந்தியாவுக்கு பரஸ்பரம் வசதியான நேரத்தில் கூடிய விரைவில் வருகை தருமாறு அமைச்சர் எஸ்பெருக்கு, பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்தார். அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
அண்மையில் இந்தியாவின் கிழக்குப் பகுதியை உம்பன் புயல் தாக்கியதில் ஏற்பட்ட உயிரிப்புகளுக்கு அமைச்சர் எஸ்பெர் தெரிவித்த இரங்கலுக்கு பாதுகாப்பு அமைச்சர் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினார். பாதுகாப்பு நலன் சார்ந்த பிராந்திய மேம்பாடு குறித்தும் இரு அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
(रिलीज़ आईडी: 1627883)
आगंतुक पटल : 348