நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

98 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் 3530 ரயில் அடுக்குகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், பொதுமுடக்கத்தின் போது நாட்டின் உணவு தானியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான 751.69 மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளதாகவும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் கூறுகிறார்.

Posted On: 29 MAY 2020 5:46PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கடந்த ஒரு வருடத்தில் எடுத்த முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவிப்பதற்காக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் காணொளி சந்திப்பு ஒன்றை இன்று நடத்தினார். ஊடகங்களிடம் பேசிய திரு. பஸ்வான், அனைத்து பொது விநியோக அட்டைதாரர்கள் மற்றும் பொது விநியோக அட்டை இல்லாதோர், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் எந்த உணவு தானியத் திட்டத்தின் கீழும் வராதோருக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்புகளை வழங்குவதே கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தனது அமைச்சகத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார். எந்த மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசத்துக்கும் உணவு தானிய விநியோகத்தில் எந்த விதமான இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில உணவு அமைச்சர்களுடனும், செயலாளர்களுடனும் அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார். போதுமான அளவுக்கு உணவு தானியங்கள் இடையகக் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறினார். சில மாநிலங்களைத் தவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம், சுய-சார்பு இந்தியா திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதரத் திட்டங்களின் கீழ் உணவு தானியங்களின் விநியோகம் திருப்திகரமாக இருப்பதாக அவர் கூறினார். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ் ஜனவரி 2021க்குள் குடும்ப அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் பணியை 100 சதவீதம் முடிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

28.5.2020 நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம் தற்போது 272.29 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும் மற்றும் 479.40 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் உள்ளதாக ஊடகங்களிடம் பேசும் போது அமைச்சர் தெரிவித்தார். மொத்தத்தில், 751.69 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது (இன்னும் கிடங்குகளுக்கு வந்து சேராத, தற்போது கொள்முதல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோதுமை மற்றும் அரிசி நீங்கலாக).

 

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 24 மார்ச், 2020-இல் இருந்து, 98.84 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 3530 ரயில் அடுக்குகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். ரயில் வழியில் மட்டுமில்லாது, சாலைகள் மற்றும் நீர்வழிகள் மூலமாகவும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 201.44 லட்சம் மெட்ரிக் டன்கள் எடுத்து செல்லப்பட்டன. 11 கப்பல்களின் மூலம் 12,000 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் எடுத்து செல்லப்பட்டன. மொத்தம் 9.61 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வட-கிழக்கு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம் 

 

. உணவு தானியம் (அரிசி/கோதுமை)

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ், அடுத்த மூன்று மாதங்களுக்கு மொத்தமாக 104.4 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 15.6 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் தேவைப்படுகின்றன. இதில், 83.38 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 12.42 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. மொத்தமாக 98.80 லட்சம் மெட்ரிக் டன்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

 

. பருப்புகள்

 

பருப்புகளைப் பொருத்தவரை, அடுத்த மூன்று மாதங்களுக்கு மொத்தமாக 5.87 லட்சம் மெட்ரிக் டன்கள் தேவைப்படுகிறது. 4.62 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் இது வரை அனுப்பப்பட்டுள்ளன. இதில் 3.64 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சென்றடைந்து விட்டன, 71,738 மெட்ரிக் டன்கள் வழங்கப்பட்டு விட்டன. 20.05.2020 அன்றைய நிலவரப்படி, 1.64 லட்சம் மெட்ரிக் டன்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் விநியோகிக்கப்பட்டுவிட்டன. மொத்தமாக 12.81 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் (துவரம் பருப்பு- 5.88 லட்சம் மெட்ரிக் டன்கள், பாசிப் பருப்பு- 1.62 லட்சம் மெட்ரிக் டன்கள், உளுத்தம் பருப்பு- 2.42 லட்சம் மெட்ரிக் டன்கள், கொண்டைக் கடலை- 2.42 லட்சம் மெட்ரிக் டன்கள் மற்றும் மைசூர் பருப்பு- 0.47 லட்சம் மெட்ரிக் டன்கள்) 20 மே, 2020-இன் படி இடையகக் கையிருப்பாக உள்ளது.

 

சுய-சார்பு இந்தியா

 

சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2.06 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே எடுத்துச் சென்று விட்டதாக திரு. பஸ்வான் கூறினார். விநியோகம் தொடங்கி விட்ட நிலையில், குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும்.

 

சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்தோர்/சிக்கித் தவிக்கும் இடம் பெயர்ந்தோரை அடையாளப்படுத்துதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் தங்களது சொந்த முறைகளில் செய்யப்படலாம் என்று கூறிய அவர்அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் நபர்களின் ஆதார் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை வைத்து அவர்கள் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழோ அல்லது மாநிலப் பொது விநியோகத் திட்டத்தின் கீழோ பயனடைந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றார். உணவு கிடைக்காமல் இருக்கும் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழோ அல்லது மாநில பொது விநியோகத் திட்டத்தின் கீழோ பயனடைந்திருக்காமல் இருக்கும் எந்த ஒரு ஏழை/உதவி தேவைப்படும் இடம் பெயர்ந்தோர்/ சிக்கித் தவிக்கும் இடம் பெயர்ந்தோருக்கு இந்தத் திட்டத்தின் பயனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கலாம்.

 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை 

 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான தேசிய பெயர்வுத்திறன் வசதி 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திரு. பஸ்வான் கூறினார். 17 மாநிலங்களில் ஒரே தேசியத் தொகுப்பின் கீழ் தடையற்ற வசதி தற்போது கிடைக்கிறது. ஜனவரி 2021க்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு இலக்கை அடைய நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.        

 

கொவிட்-19 பரவலைக் கையாள எத்தனால் உற்பத்தியை ஊக்குவித்தல்

 

நடப்பு எத்தனால் விநியோக ஆண்டு 2019-2020க்காக (டிசம்பர், 2019 - நவம்பர், 2020) சர்க்கரை மற்றும் சர்க்கரைப் பாகில் இருந்து எத்தனால் தயாரிக்க அரசு அனுமதித்துள்ளதாகக் கூறிய அவர், சி-கனமான வெல்லப்பாகுகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ 43.75ம், பி-கனமான வெல்லப்பாகுகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ 54.27ம், கரும்பு/சர்க்கரை/சர்க்கரைப் பாகில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ 59.48ம் ஆலை விலையாக நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் இணைந்து உணவு மற்றும் பொது விநியோகத் துறை எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, கைகளைத் தூய்மைப்படுத்த உபயோகப்படுத்தப்படும் கிருமி நாசினியைத் தயாரிப்பதற்காக, ஈத்தைல் ஆல்கஹால்/எத்தனால் ஆகியவற்றை சேமித்து வைக்கத் தேவைப்படும் அனுமதிகளும் உரிமங்களும் சர்க்கரை ஆலைகள்/காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலைகள்/கிருமி நாசினி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டன. இதன் விளைவாக, நாடெங்கிலும் உள்ள 165 காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் 962 சுயசார்பான உற்பத்தியாளர்களுக்கு கிருமி நாசினி தயாரிக்க உரிமங்கள் வழங்கப்பட்டு, 87,20,262 லிட்டர்கள் கிருமி நாசினி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது (11.5.2020 வரை).

 

கந்தகம் இல்லாத சர்க்கரையை உற்பத்தி செய்ய கரும்பு சாறு தெளிவுறுதலுக்கானப் புதிய செயல்முறைக்கு தேசிய சர்க்கரை நிறுவனத்துக்கு (NSI) காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

 

அரிசி வலுவூட்டல்

 

'அரிசி வலுவூட்டல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதன் விநியோகம்' என்னும் மத்திய அரசு ஆதரவு பெற்ற மாதிரித் திட்டத்தைப் பற்றி தகவல் அளித்த திரு. பஸ்வான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பிப்ரவரி, 2020-இல் இருந்து இந்தத் திட்டத்தின் கீழ் வலுவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உதவி/ஆதரவு பெறும் விடுதிகளை, நல நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்காக வழிகாட்டுதல்களில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பிச்சைக்காரர் இல்லங்கள், பெண்கள் இல்லங்கள், மற்றும் இது போன்ற இதர நல நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நடத்தும் அல்லது ஆதரவு/உதவி பெறும் நல நிறுவனங்கள், பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்படுத்த வகுப்புகளை சேர்ந்தோர் மூன்றில் இரண்டு பங்குள்ள அரசு நடத்தும் அல்லது ஆதரவு/உதவி பெறும் விடுதிகளின் அனைத்து மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வறுமைக் கோட்டுக்கு கீழான விலைகளில் உணவு தானியங்களை தற்போது ஒதுக்கீடு செய்யலாம்.

 

அதிக வருவாயை ஈட்டியுள்ள மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்

 

மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் இது வரையில் இல்லாத அளவுக்கு அதிக வருவாயாக ரூ 1710 கோடியை 2019-20-இல் ஈட்டியுள்ளதாக திரு. பஸ்வான் தெரிவித்தார். தனது முதலீடு செய்த மூலதனத்தில் 95.53 சதவீதத்தை 2019-20ஆம் வருடத்துக்கான இடைக்கால ஈவுத்தொகையாக மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் இது 72.20 சதவீதம் ஆகும். மொத்த ஈவுத்தொகையான ரூ 64.98 கோடியில், ரூ 35.77 கோடியை இந்திய அரசு பெற்றுள்ளது.

***
 



(Release ID: 1627754) Visitor Counter : 252