பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கு கடற்படை கட்டளை தளத்தில் புற ஊதா கிருமிநீக்கும் வசதிகள் உருவாக்கம்
Posted On:
28 MAY 2020 8:16PM by PIB Chennai
தற்போது ஏற்பட்டுள்ள தேவையைச் சமாளிக்கும் வகையில் கடற்படை தளம் (மும்பை) புற ஊதா கிருமி நீக்கும் பகுதியை உருவாக்கியுள்ளது. இது கருவிகள், துணிகள் மற்றும் இதர பொருட்களைத் தூய்மைப்படுத்தவும், கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும். ஒரு பெரிய பொது அறையை, புற ஊதா –சி ஒளிக்கான அலுமினிய விரிப்புகளுடன் கூடிய மின் ஏற்பாடுகளை உருவாக்குவதன் மூலம் புற ஊதா பகுதியாக மாற்றும் சவாலான பணிக்கு சிறந்த மதி நுட்பம் தேவையாகும்.
புற ஊதா-சி ஒளி ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பொருட்கள் மூலம் கிருமிகளை அழிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சார்ஸ், இன்புளூயன்சா போன்ற சுவாசத்தடை ஏற்படுத்தும் கிருமிகளை புற ஊதா-சி ஒளி அழிக்கக்கூடியது என்பதை மிகச்சிறந்த ஆராய்ச்சி முகமைகள் நடத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
-----
(Release ID: 1627618)
Visitor Counter : 261