பாதுகாப்பு அமைச்சகம்
தேஜஸ் Mk-1 FOC விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது
Posted On:
27 MAY 2020 8:29PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய விமானப்படை தளம், சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட பறக்கும் புல்லட்டுகள் “Flying Bullets” எண் 18 ஸ்குவாட்ரன் தேஜஸ் Mk-1 FOC விமானம் புதன்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்திய விமானப்படையில் இந்தத் தளத்தை இணைப்பதில் இந்த ஸ்குவாட்ரனே முதலாவதாகும். இது நாட்டின் உள்நாட்டு போர் விமானத் திட்டத்தின் முக்கிய மைல்கல் ஆகும். “ மேக் இன் இந்தியா” இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்கும் இது கணிசமான அளவு ஊக்கமளிக்கும் முயற்சியாகும். Tejas Mk-1 FOC விமானம், ஒரு எஞ்சின் கொண்ட, இலகு ரக, மிக விரைவாகச் செயல்படக் கூடிய, எல்லா பருவ நிலைகளையும் எதிர்கொள்ளக்கூடிய, பல பணிகளை ஆற்றக்கூடிய போர் விமானமாகும். விமானத்தில் இருந்து விமானம் மூலம் எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியும் திறன் கொண்டதால், இது உண்மையிலேயே மிகத் திறன்வாய்ந்த விமானமாகும்
விமானப்படை தலைவர் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் படோரியா, இந்த ஸ்குவாட்ரனை இயக்கி வைத்தார். தெற்கு விமானப்படையின் ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப் ஏர் மார்ஷல் அமீத் திவாரி, 18 ஸ்குவாட்ரனின் க்மோட்ர் கமான்டன்ட் டிடி ஜோசப், எச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஆர் மாதவன், பி ஜி டி சி ஏ டாக்டர் கிரிஷ் டியோடர் மற்றும் ஏரோநாட்டிகல் மேம்பாட்டு முகமையின் இயக்குனர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்த பணியாளர்களிடையே பேசிய விமானப்படை தலைவர் புதிய விமானத்தை புகுத்துவதற்கு தெற்கு விமான படையின் முயற்சிகளைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைச் செய்வதற்கு, இந்த விமானத்தை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருந்த HAL நிறுவனத் தலைவர், ஏ டி ஏ, டி ஆர் டி ஓ ஆய்வுக்கூடங்கள், டி பி எஸ் யு, எம்எஸ்எம்இகள் மற்றும் இதர முகமைகள் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
(Release ID: 1627367)