எரிசக்தி அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் ரூ.22,000 கோடி மதிப்பிலான 225 மெகாவாட் நீர்மின் திட்டம் மற்றும் பல்நோக்குத் திட்டங்களுக்கான நிதி வழங்க நர்மதா படுகைத் திட்டங்கள் நிறுவனத்துடன் மின் நிதிக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

Posted On: 26 MAY 2020 6:14PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் மற்றும் இந்தியாவின் வங்கியல்லாத முன்னணி நிதி நிறுவனமான மின் நிதிக் கழகம், மத்தியப்பிரதேச மாநில அரசுக்குச் சொந்தமான நர்மதா படுகை திட்டங்கள் நிறுவனத்துடன் (என்பிபிசிஎல்) இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. மத்தியப் பிரசேசத்தில் ரூ.22,000 கோடி மதிப்பில்,செயல்படுத்தப்படவுள்ள 225 மெகாவாட் நீர்மின் திட்டங்கள் மற்றும் பல்நோக்குத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

 

மத்தியப் பிரதேசத்தில், 225 மெகாவாட் நீர்மின் திட்டங்கள் மற்றும் மின் உபகரணங்களுக்கான 12 பெரிய பல்நோக்குத் திட்டங்களுக்கு என்பிபிசிஎல் நிதி அளிக்கிறது. மெய்நிகர் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின் நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜீவ் சர்மா, என்பிபிசிஎல் மேலாண்மை இயக்குநர் திரு. ஐ.சி.பி. கேஷரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மத்தியப் பிரதேச மாநில அரசு இத்திட்டங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்தியதுடன், செயல்பாட்டுக்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டுடன், நிதி ஒதுக்கீடு இணைக்கப்படும்.

225 மெகாவாட் நீர் மின் திட்டம் மற்றும் பல்நோக்குத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதில் மின் நிதிக்கழகம், என்பிபிசிஎல் உடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். 12 பெரிய பல்நோக்கு திட்டங்களைச் செயல்படுத்தும் மாநில அரசின் முயற்சியின் பகுதியாக இது அமையும்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், செயல்படுத்தப்படவுள்ள பெரிய பல்நோக்குத் திட்டங்களில், பசானியா பல்நோக்குத் திட்டம், தின்டோரி, சிங்கி போரஸ் பல்நோக்குத் திட்டம், நரசிங்பூர், ரைசன் , ஹொசங்காபாத், சக்கர் பெஞ்ச் லிங்க் நரசிங்பூர் சிந்த்வாரா, துதி திட்டம் சிந்த்வாரா ஹொசங்காபாத் உள்ளிட்டவை அடங்கும்.

 

===================



(Release ID: 1627000) Visitor Counter : 240