ஜல்சக்தி அமைச்சகம்
உலக ஆமைகள் பாதுகாப்பு தினம்: நீர் வாழ் உயிரினங்களைக் காக்க ஜல்சக்தி துறை அமைச்சர் அறைகூவல்.
Posted On:
23 MAY 2020 8:20PM by PIB Chennai
கங்கை நதியின் தூய்மைக்கான தேசிய இயக்கமும் (National Mission for Clean Ganga - NMCG), இந்திய வன உயிரின நிறுவனமும் (Wildlife Institute of India - WII), பல்லுயிர்ப் பாதுகாப்பு முனைப்பு முதல் திட்டத்துடன் (Biodiversity Conservation Initiative Phase II) இணைந்து உலக ஆமைகள் பாதுகாப்பு தினத்தை இன்று (மே 23) கொண்டாடின. இதையொட்டி இணையம் மூலமாக நடைபெற்ற கருத்தரங்கில் (Webinar) தூய கங்கை தேசிய இயக்கத்தின் (National Mission for Clean Ganga - NMCG) தலைமை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன், இந்திய வன உயிரின நிறுவன (Wildlife Institute of India - WII) இயக்குநர் டாக்டர் தனஞ்சய் மோகன், பள்ளிக் குழந்தைகள், தூய கங்கை தேசிய இயக்கம் மற்றும் இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் குழுவினர், கங்கை பாயும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் (Ganga Praharis) என பலதரப்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இணையம் வழியாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “இந்தியப் பண்பாட்டில் பல்லுயிர்த் தன்மை பின்னிப் பிணைந்தது. ஆமையின் மகத்துவத்தை அறிவதும், வழிபடுவதும் பல்லாயிரம் ஆண்டு காலமாக இருக்கும் நடைமுறையாகும்” என்று குறிப்பிட்டார்.
ஆமைகள் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றன என்று குறிப்பிட்ட அவர், அதற்காக சன்மானம் பெறுவதில்லை என்றார் அமைச்சர்.
ஆமைகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைக் காப்பதற்கு தேசிய தூய கங்கைப் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். வனப்பாதுகாப்பு மையங்களை அமைக்கப்படுகின்றன, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
உலக வன உயிரின நிறுவனம் மூலம் டேராடூன் உள்ளிட்ட இடங்களில் பசுமை விதைகளை நட்டு பயிர் வளர்ப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது என்று கங்கைத் தூய்மைப் பிரதிநிதிகள் (Ganga Praharis) தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். செலவு மிச்சமாவதுடன் மண்வளம் மாசுபடாமல் இருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
****
(Release ID: 1626562)
Visitor Counter : 237