பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் ஜம்மு காஷ்மீர் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சந்திப்பு.

Posted On: 23 MAY 2020 9:11PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை ஜம்மு காஷ்மீர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Jammu & Kashmir PSC) தலைவராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பி.ஆர். சர்மா இன்று (மே 23) தில்லியில் சந்தித்தார்.

புதிதாகப் பொறுப்பேற்றதற்காக பி.ஆர், சர்மாவை வாழ்த்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட நடைமுறைகளை விரைவில் தொடங்கவேண்டும் என்றார். இது தொடர்பாக மிக முக்கியமான பொறுப்பு சர்மாவுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அதில் நீண்டகால அனுபவம் மிக்க சர்மாவின் திறமை பெரிதும் துணை புரியும் என்றார்.

கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலப் பகுதிகளில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்தும் தற்போதைய நிலைமையின்படி பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பல்வேறு முறைகளையும் அமைச்சரிடம் சர்மா விவரித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமைப் பொறுப்பு ஏற்றுச் செயல்படுவது பெரிய கவுரவம் என்று கூறினார்.

 

அதிலும் குறிப்பாக நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிப்பதிலும் பல்வேறு அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் உள்ள குறிக்கோளிலும் அரசு உறுதியாக இருக்கிறது என்றார்.

 


(Release ID: 1626560) Visitor Counter : 179