அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கண்டறிய ஆர்.என்.ஏ.வைப் பிரித்தெடுக்கும் அகப்பே சித்ரா மேக்னா என்ற உபகரணத் தொகுப்பு வணிக ரீதியில் அறிமுகம்

Posted On: 21 MAY 2020 7:59PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கண்டறிவதற்கு நேனோ காந்தத் துகள் அடிப்படையிலான - ஆர்.என்.ஏ. பிரித்தெடுக்கும் அகப்பே சித்ரா மேக்னா என்ற உபகரணத் தொகுப்பு வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்படுவதாக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரும், ஸ்ரீசித்ர  திருநள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்தின் (SCTIMST) இன்ஸ்டிடியூட் அமைப்பின் தலைவருமான டாக்டர் வி.கே. சரஸ்வத் இன்று அறிவித்தார். அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுட்டோஷ் சர்மா, SCTIMST டைரக்டர் டாக்டர் ஆஷா கிஷோர், அதன் இயக்குநர் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் டாக்டர் எச்.கே. வர்மா மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காணொலி மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கொச்சியில் உள்ள அகப்பே நோயறிதல் லிமிடெட் என்ற நோயறிதல் சாதன உற்பத்தி நிறுவனத்துடன்  இணைந்து ஆர்.என்.ஏ. பிரித்தெடுக்கும் உபகரணத் தொகுப்பை திருவனந்தபுரம் SCTIMST உருவாக்கியுள்ளது. இது அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையமாக உள்ளது.

``கோவிட்-19 நோயைக் கண்டறிதலில் இந்தியாவை தற்சார்பானதாக ஆக்குவதாக இந்த வணிக ரீதியிலான அறிமுகம் அமைந்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகரிக்கவும், அதற்கான செலவுகளைக் குறைக்கவும் இது உதவும். நோய்த் தாக்குதலைக் குறைப்பதில் இது முக்கியமான செயல்பாடாக இருக்கும். துரிதமாக வணிகமயமாக்கல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதலில் உலக நாடுகள் பின்பற்றக் கூடிய ஒரு உதாரணமான செயல்பாடாகவும் இது இருக்கும்'' என்று டாக்டர் சரஸ்வத் கூறினார்.

*****



(Release ID: 1626028) Visitor Counter : 211


Read this release in: English , Hindi , Assamese , Telugu