மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சிபிஎஸ்இ தயாரித்த மாணவர்களுக்கான இணையவெளிப் பாதுகாப்பு குறித்த 3 கையேடுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் வெளியிட்டார், 21-ம் நூற்றாண்டு திறன்கள் மற்றும் முதல்வர்கள் கையேடும் வெளியீடு

Posted On: 20 MAY 2020 5:53PM by PIB Chennai

மதிப்பு அடிப்படையிலான உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் தழுவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ தயாரித்த மூன்று கையேடுகளை புதுதில்லியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ காணொலி மூலம் வெளியிட்டார்.

மூன்று கையேடுகளை வெளியிட்டு உரையாற்றிய அமைச்சர், ‘இணையவெளிப் பாதுகாப்பு- இடைநிலை மற்றும் முதுநிலைப் பள்ளிகளுக்கான கையேடு’, ஒன்பதாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடையே இணையவெளிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது எனத் தெரிவித்தார். இணையதளம் மற்றும் இதர டிஜிடல் தளங்களைப் பயன்படுத்தும் வளர் இளம்பருவத்தினர் எதிர்கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு அபாயங்களுக்குத் தீர்வு காணும் துல்லியமான வழிகாட்டியாக இந்தக் கையேடு இருக்கும் என அவர் கூறினார்.

நாட்டின் முழுமையான கல்வி முறையின் கீழ், தொடர்புடைய அனைவருக்கும் பயனளிக்கும் கையேடுகளைத் தயாரித்த சிபிஎஸ்இயின் முயற்சிகளை திரு. பொக்ரியால் பாராட்டினார். இணையவெளி பாதுகாப்பு குறித்த சிறந்த புரிந்துணர்வை உருவாக்கவும், திறன் முன்னேற்றம், திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், தலைமை அனுபவம் ஆகியவற்றை அடையவும் இந்தக் கையேடுகள் பெரிதும் உதவும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இணையவெளி பாதுகாப்பு கையேட்டுக்கு இங்கே கிளிக் செய்யவும்;

http://cbseacademic.nic.in/web_material/Manuals/Cyber_Safety_Manual.pdf

முதல்வர்கள் கையேட்டுக்கு இங்கே கிளிக் செய்யவும்;

http://cbseacademic.nic.in/web_material/Manuals/Principals_Handbook.pdf

21-ம் நூற்றாண்டு திறன்கள் கையேட்டுக்கு இங்கே கிளிக் செய்யவும்;

http://cbseacademic.nic.in/web_material/Manuals/21st_Century_Skill_Handbook.pdf



(Release ID: 1625695) Visitor Counter : 215