சுற்றுலா அமைச்சகம்

'நமது தேசத்தை பாருங்கள்' வரிசையின் கீழ் 21வது இணையக் கருத்தரங்கை 'போபால் புகைப்பட நடைப்பயணம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா' என்னும் தலைப்பில் சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

Posted On: 20 MAY 2020 3:38PM by PIB Chennai

'வியக்கத்தக்க இந்தியாவின் இதயமாக' விளங்கும் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை 19.05.2020 அன்று நடந்த சுற்றுலாத் துறையின் 'நமது தேசத்தைப் பாருங்கள்' இணையக் கருத்தரங்கம் காட்சிப்படுத்தியது.  

 

'நமது தேசத்தை பாருங்கள்' இணையக் கருத்தரங்க வரிசையின் கீழ் 21வது நிகழ்ச்சியான 'போபால் புகைப்பட நடைப்பயணம்: பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவைசுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருவாளர் ருபீந்தர் பிரார் ஒருங்கிணைக்க, இந்தியா சிட்டி வாக்ஸின் டாக்டர். சவுமி ராயும், திரு. ஹிமான்ஷு ராணாவும், நகர ஆய்வுப்பயண ஆர்வலரான திரு ஷிவம் ஷர்மாவுன் இணைந்து, போபாலின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் முக்கிய அம்சங்களைப் பற்றி விளக்கிக் கூறினர்.

 

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. மேல் ஏரி, கீழ் ஏரி என்ற இரு முக்கிய ஏரிகளுடனும், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பண்டைய அணிகலன்கள், உடைகள், உணவு மற்றும் இன்னும் பல சிறப்பம்சங்களுடனும் இந்த நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. போபாலின் வரலாற்று உண்மைகளை, பல்வேறு குறிப்புகளுடனும், போபாலில் அவசியம் காண வேண்டிய இடங்களைப் பற்றியத் தகவல்களுடனும் இந்த இணையக் கருத்தரங்கம் விளக்கியது.

 

இணையக் கருத்தரங்க நிகழ்ச்சிகளின் காணொளிகள், https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் கிடைக்கின்றன.

 

இணையக் கருத்தரங்கின் அடுத்த பாகம் 21 மே, 2020 அன்று காலை 11 மணிக்கு, 'புலிகள் மற்றும் சுற்றுலா' என்னும் தலைப்பில் நடைபெறும்.

https://bit.ly/2X7FvoD என்னும் சுட்டியில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

***



(Release ID: 1625654) Visitor Counter : 204


Read this release in: Punjabi , English , Urdu , Hindi