நிதி அமைச்சகம்

விற்பனைக்கான ஏலம் (மறுவெளியீடு) ‘5.09% GS 2022’, விற்பனைக்கான ஏலம் (மறுவெளியீடு) ‘5.79% GS 2030’, விற்பனைக்கான ஏலம் (மறுவெளியீடு) ‘GoI Floating Rate Bond 2031’, மற்றும் விற்பனைக்கான ஏலம் (மறுவெளியீடு) ‘7.19% GS 2060’

Posted On: 18 MAY 2020 6:22PM by PIB Chennai

 இந்திய அரசு பின்வரும் ஏ விற்பனையை (மறுவெளியீடு) அறிவித்துள்ளது:

I} 3000 கோடி (நாமினல்) அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனை ‘5.09 சதவிகித அரசு பங்குகள், 2022’

ii) 18,000 கோடி (நாமினல்)அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனை ‘5.79 சதவிகித அரசு பங்குகள், 2030’

iii) 4,000 கோடி (நாமினல்) அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனை மாறுபடும் வட்டி விகிதத்திலான அரசு கடன் பத்திரங்கள்.2031’

iv) 5,000 கோடி (நாமினல்) அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனை ‘7.19 சதவிகித அரசு பங்குகள், 2060’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடன் பத்திரங்களுக்கு, கூடுதலாக வரும் 2000 கோடிஅளவிற்கான சந்தா தொகையை அரசே வைத்துக்கொள்ள அரசு தேர்வு செய்யலாம். இந்த ஏலங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின், மும்பை கோட்டையிலுள்ள மும்பை அலுவலகத்தில் 22 மே 2020 அன்று (வெள்ளிக்கிழமை) பன்முக விலை முறையைப் பயன்படுத்தி நடத்தப்படும்.

அரசு கடன் பத்திரங்களில் போட்டிற்ற ஏலம் எடுக்கும் வசதித் திட்டத்தின் படி, பங்கு விற்பனையின் மொத்த அறிவிக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் தகுதியுள்ள தனியாருக்கும், அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும். போட்டிக்குட்பட்ட மற்றும் போட்டியற்ற என, இரண்டு முறைகள் மூலமாகவும் கேட்கப்படும் ஏலங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பாங்கிங் சொல்யூஷன் இ-குபேர் (E-KUBER) முறை மூலமாக மின்னணு வடிவத்தில் 22 மே 2020 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டிகளற்ற ஏலம் எடுத்தல் (Bids) காலை பத்தரை மணி முதல் 11 மணி வரையும், போட்டிக்குட்பட்ட ஏலம் எடுத்தல் (Bids) காலை பத்தரை மணி முதல் 11 மணி வரையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏல முடிவுகள் 22 மே 2020 வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் 26 மே 2020 செவ்வாய்க்கிழமையன்று பணம் செலுத்த வேண்டும்.

வெளியிடப்படும் போது வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்ற அளவில், இந்தப் பங்குகள் வர்த்தகம் செய்யத் தகுதியானவையாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின், 24 ஜூலை 2018 தேதியிடப்பட்ட சுற்றறிக்கை எண் RBI/2018-19/25 (காலத்திற்கு காலம் செய்யப்பட்ட திருத்தங்களுடன்) அறிவிக்கப்பட்டபடி, மத்திய அரசு கடன் பத்திரங்களில் வெளியிடப்படும் போது மேற்கொள்ளக்கூடிய பரிமாற்றங்கள் என்ற விதிமுறைகளின்படி, இப்பங்குகளை வர்த்தகம் செய்து கொள்ளலாம்.



(Release ID: 1624972) Visitor Counter : 176