பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி திறன்கள் முழு ஆற்றலை அடைய புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் தனித்துவ வாய்ப்பை வழங்கும் : டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 17 MAY 2020 7:16PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று பரவலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத் தொகுப்பு பல இதர விஷயங்களுடன், அணுசக்தி துறையின் ஆதரவின் கீழ், மருத்துவ ஐசோடேப்புகளைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மேற்கொள்ளவும், பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் பிரத்யேக அணுஉலையை உருவாக்கவும் பெரிதும் உதவும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத் தொகுப்பு,  புதுமையான, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட துணிச்சலான நடவடிக்கை என்று குறிப்பிட்ட அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஜித்தேந்திர சிங், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி பாதுகாப்பான ரகசிய பின்னணியில் இயங்கி வந்ததாகவும், முந்தைய வழியில், வரையறுக்கப்பட்ட வரம்புக்குள் புதிதாக எதையும் திட்டமிடுவதைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முதன்முறையாக , அணுசக்தி துறை வேறுபட்ட பகுதிகளில் செயல்படக்கூடிய உணர்வையும், நமது அன்றாட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் மருத்துவ ஐசோடேப்புகள் உற்பத்தி மூலம் புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை பெற உதவுவதுடன், உலகம் முழுவதற்கும் மனித குலத்துக்கு தொண்டாற்றுவதற்கும் உதவும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். இதேபோல, தொகுப்பில் கூறப்பட்டுள்ள இதர அணுசக்தி தொடர்பான சீர்திருத்தங்கள், வாழ்வை நீட்டிக்கும் வகையிலான  உணவு பதப்படுத்துவதற்கு கதிர்வீச்சு தொழில்நுட்ப பயன்பாடு அமையும் என்று அவர் கூறினார். இந்த வழிவகை அறிவு நமது விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருந்த போதிலும், கதிர்வீச்சு தொழில்நுட்பம் முதல்முறையாக பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இப்போதுதான் செயல்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

விண்வெளி துறையைப் பொறுத்தவரை, விண்வெளி மற்றும் இஸ்ரோவில் தனியார் துறையை அனுமதிப்பது குறித்த பொருளாதாரத் தொகுப்பு சீர்திருத்தங்கள் செயற்கைக் கோள் ஏவுதல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் தனியார் துறைக்கு சம வாய்ப்பு களத்தை வழங்கும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். இது தவிர, தாராள புவி இடஞ்சார் கொள்கைக்கு அனுமதி அளிக்கும் முக்கிய முடிவு, தொழில்நுட்ப தொழில்களுக்கு தொலை உணர்வு தரவுகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

******



(Release ID: 1624859) Visitor Counter : 174